1. மற்றவை

இ-சேவை மையங்களில் மத்திய அரசின் சேவை இணைப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
E-Sevai Center

தமிழகத்தில் இயங்கி வரும், மாநில 'இ-சேவை' (E-sevai) மையங்களில், மத்திய அரசின் சேவைகளையும் இணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா (Digital India)

மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில், அனைத்து அரசுத்துறைகளும் நவீனமயமாகி வருகின்றன. பொதுமக்கள், 'இ-சேவை' மையங்களில், 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்து, கட்டண அடிப்படையில், சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர்.

தமிழகத்தில், கூட்டுறவு சங்கங்கள் - 4,370; வறுமை ஒழிப்பு சங்கம் - 4,269; கிராம தொழில் முனைவோர் - 2,334; தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் - 661 உட்பட, 12 ஆயிரத்து, 716 'இ-சேவை' மையங்கள் இயங்கி வருகின்றன.

இணைப்பு (Linked)

இவற்றில், மாநில அரசு தொடர்பான, 110 வகையான சேவைகள் அளிக்கப்படுகின்றன. இருப்பினும், மத்திய அரசின் சேவைகள், இவற்றில் கிடைப்பதில்லை. பொது சேவை மையங்கள் இயங்கும் முகவரி தொடர்பான விவரமும் மக்களுக்கு கிடைப்பதில்லை. இதனால், 'இ-சேவை' மையங்களில், மத்திய அரசின் சேவைகளையும் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்த பணிகளை, பொது சேவை மைய மாவட்ட மேலாளர்கள் துவக்கியுள்ளனர்.

மேலும் படிக்க

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு தேசிய அளவில் 4-ம் இடம்!

வேளாண் போராட்டம் விவசாயிகளுக்கு சிறந்த பயிற்சி - விவசாய சங்கம்!

English Summary: Central Government Service Link at e-sevai Centers! Published on: 16 December 2021, 06:48 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.