தொடர்ந்து போராடி வந்த அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதற்கு இந்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பழைய பென்சன் அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளில் மிக முக்கியமான ஒன்று பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது. தற்போது நடைமுறையில் உள்ள CPS எனப்படும் பங்களிப்பு பென்சன் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை எனவும் இதில் இழப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் இத்திட்டத்தை அமல்படுத்தக் கோரி வலியுறுத்தி வருகின்றன.
போராட்டம்
இந்தியாவில் தற்போது ஒரு சில மாநிலங்கள் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தியுள்ள நிலையில் அந்த வரிசையில் ஜார்கண்ட் மாநிலமும் இணைந்தது. சத்தீஷ்கர் மாநிலத்தில் கூட அமல்படுத்தப்பட்டுவிட்டது. இதனால் மற்ற மாநிலங்களும் இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம்
நீண்ட கோரிக்கைகளுக்கு மத்தியில் பஞ்சாப் மாநிலத்தில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது. இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும், அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மன் தெரிவித்திருந்தார்.
அமைச்சரவை ஒப்புதல்
இந்நிலையில் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கு பஞ்சாப் மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது 1.75 லட்சம் அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எப்போது?
தமிழ்நாட்டில் எப்போது என்று தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். இதற்காக தொடர்ந்து போராடியும் வருகின்றனர்.
மேலும் படிக்க...
காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!