இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 5 July, 2021 10:55 AM IST
Collector Office

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் அறிவிக்கவுள்ள புதிய மாவட்டம் பட்டியல் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக ஆட்சி அமைந்தவுடன் கும்பகோணத்தை தலைமையிட மாகக்  புதிய மாவட்டமாக்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அதன்பின் கடந்தமாதம் கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதிய மாவட்டம் குறித்த அறிவிப்பு ஏதும் வரவில்லை, கடந்த ஆட்சிக் காலத்திலும் மயிலாடுதுறை, தென்காசி உள்ளிட்ட புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் திமுக ஆட்சியில் மாவட்டமாக அறிவிக்கப்படவுள்ள ஊர்களின் பட்டியல் வெளிவந்துள்ளது.

புதிய மாவட்டங்களின் விபரங்கள்

39 ஆவது மாவட்டம்

கடலூர் – விருத்தாச்சலம் மாவட்டம்

40 ஆவது மாவட்டம்

தஞ்சாவூர்- கும்பகோணம் மாவட்டம்

41 ஆவது மாவட்டம்

திருவண்ணாமலை – செய்யாறு மாவட்டம்

42 ஆவது மாவட்டம்

கோயம்புத்தூர்- பொள்ளாச்சி மாவட்டம்

43 ஆவது மாவட்டம்

திண்டுக்கல்- பழனி மாவட்டம்

44 ஆவது மாவட்டம்

தூத்துக்குடி- கோவில்பட்டி மாவட்டம்

இப்படி மாவட்டங்களை பிரிப்பதற்கு பின் நிறைய அரசியல் காரணங்களும் இருக்கிறது. இதன் மூலம் திமுக பெரிய அளவில் பலன் அடையும். தேர்தலில் வெற்றிபெற இது ஒரு எளிய வழியாகும். இது பெரிய அளவில் பலன் கொடுக்கும் என்றும் நம்பப்படுகிறது.

கடந்த ஆண்டு  மட்டும், நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியும், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும், காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டும், புதிய மாவட்டங்களாக உருவெடுத்தன. வேலூர் மூன்றாக பிரிக்கப்பட்டு, வேலூரில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் தோன்றின.

மேலும் படிக்க:

தமிழகத்தில் பொதுவான தளர்வுகள் இன்று முதல் அமல்: 11 மாவட்டங்களில் கட்டுப்பாடு நீங்கியது!

அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி: உறுதி செய்யும்படி அரசுக்கு, ஐகோர்ட் அறிவுரை!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு வாசனைப்பயிர்களின் மேம்பாட்டிற்காக தலைச்சிறந்த செயல்பாட்டு மைய விருது!

English Summary: Towns declared new districts! Notice coming soon
Published on: 05 July 2021, 10:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now