1. செய்திகள்

தமிழகத்தில் பொதுவான தளர்வுகள் இன்று முதல் அமல்: 11 மாவட்டங்களில் கட்டுப்பாடு நீங்கியது!

R. Balakrishnan
R. Balakrishnan
Lockdown Relaxations

Credit : Dinamalar

தமிழகம் முழுதும் மே, ஜூன் மாதங்களில், கொரோனா இரண்டாது அலை (Corona Second wave) பரவல் அதிகரித்தது. இதையடுத்து, முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது. இதன் விளைவாக, பல்வேறு மாவட்டங்களில், தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. அதனால், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.

போக்குவரத்து துவக்கம்

பாதிப்பு சற்று அதிகம் இருந்த, கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட, 11 மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து (Tranportation) துவங்கியது. டீ கடைகள், உணவகங்கள், வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன.தற்போது, பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால், 11 மாவட்டங்களுக்கான கட்டுப்பாடுகளும் நீங்குகின்றன.

தளர்வுகள்

மக்களின் வாழ்வாதாரம், அத்தியாவசிய தேவைகள், மாநிலத்தின் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும், ஒரே வகையான தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இந்த தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

  • நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர, மற்ற இடங்களில் இரவு, 8:00 மணி வரை கடைகள் செயல்படலாம்.
  • உணவகங்கள், பேக்கரிகள், தங்கும் விடுதிகளில், காலை, 6:00 முதல் இரவு, 8:00 மணிவரை அமர்ந்து உணவு சாப்பிடலாம். டீ கடைகளிலும் அமர்ந்து, டீ அருந்தலாம்.
  • உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் செயல்படலாம்.
  • டாஸ்மாக் மதுக்கடைகளும் காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணிவரை செயல்படலாம்.
  • அனைத்து வழிபாட்டு தலங்களிலும், பக்தர்கள் உரிய வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, சாமி தரிசனம் செய்யலாம்.
  • துணிக்கடைகள் மற்றும் நகை கடைகள், வணிக வளாகங்கள், காலை, 9:00 முதல் மாலை, 8:00 மணிவரை இயங்கலாம்.
  • மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும், பஸ் போக்குவரத்து (Bus Transport) அனுமதிக்கப்படுகிறது.

ஏற்கனவே, முதல்கட்டமாக, நான்கு மாவட்டங்கள், இரண்டாம் கட்டமாக, 23 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பஸ் போக்குவரத்து துவங்கியது. இன்று முதல் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கும், பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

  • ஆராய்ச்சி மாணவர்கள், தங்கள் கல்வி சார்ந்த பணிகளை கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.

மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க, 'இ - பாஸ்' (E-Pass) பதிவு நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, தமிழகம் முழுதும் இன்று பெரும் அளவுக்கு இயல்பு நிலை திரும்ப உள்ளது.

மேலும் படிக்க

மாதத்திற்கு இரு முறை உருமாறும் கொரோனா!

அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி: உறுதி செய்யும்படி அரசுக்கு, ஐகோர்ட் அறிவுரை!

English Summary: General relaxations in Tamil Nadu effective from today: 11 districts deregulated!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.