சென்னை பல்கலைக்கழகம் 2021-22 கல்வி ஆண்டில் அதன் உறுப்பு கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளில் இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏழை மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் இளங்கலை படிப்புகளில் சேர தாராளமாக விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின்படி சென்னைப் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் இரண்டு மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 2010-11 முதல் மாணவர்கள் சேர்க்கை தொடங்கி வருகிறது.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள், பெற்றோர்கள் இல்லாத மாணவர்கள், தந்தையை இழந்த குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் முதல் பட்டதாரிகளுக்கும் இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சேர்க்கை கோரும் மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்” என பல்கலைக்கழகத்தின் பதிவாளர் என்.மதிவாணன் கூறியுள்ளார்.
ஆன்லைன் விண்ணப்ப படிவம் மற்றும் இந்த திட்டத்தின் விவரங்கள் பல்கலைக்கழக வலைத்தளமான http://www.unom.ac.in இல் கிடைக்கும். இந்த திட்டத்தில் சேர உற்சாகமாக இருக்கும் மாணவர்கள், பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகள் வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
கொரோனா நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஆன்லைன் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்றுக்கொள்வதாக பல்கலைக்கழகம் தெரிவித்தது.
மேலும் படிக்க:
கொரோனாவை கட்டுப்படுத்த செப்டம்பர் மாதத்திற்குள் 10% மக்களுக்கு தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு!
ஒரு குண்டுபல்புக்கு 2.5 லட்சம் மின்கட்டணம்- அதிர்ச்சியில் உறைந்த மூதாட்டி!