1. செய்திகள்

ஒரு குண்டுபல்புக்கு 2.5 லட்சம் மின்கட்டணம்- அதிர்ச்சியில் உறைந்த மூதாட்டி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
2.5 lakh electricity charge for a bomb - frozen old woman in shock!

ஒரு சிறிய வீட்டில் வசிக்கும் மூதாட்டிக்கு ரூ. 2.5 லட்சம் மின்கட்டணம் செலுத்துமாறு வந்துள்ள தகவல் அவரை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

அரசு பணியின் கண்ணியம் (Dignity of government service)

எனக்கு ஒதுக்கப்பட்டப் பணியை கவனத்துடனும், கண்ணியத்துடனும் செய்வதாக எழுத்து பூர்வமாக உறுதிமொழி அளித்தே அனைத்து அரசு ஊழியர்களும் பணியில் சேர்கின்றனர்.

உயிராகக் கருதி (Assuming alive)

அவ்வாறு அளித்த வாக்குறுதியை தன் உயிராகக் கருதி ஓய்வுபெறும் காலம்வரை உத்தமர்களாக வாழ்பவர்களும் உண்டு.

எண்ணற்ற இன்னல்கள் (Countless tribulations)

ஆனால் அளித்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, கொஞ்சமும் அக்கறையில்லாமல், அரசு ஊழியர் என்ற அகங்காரத்துடன் மற்றவர்கள் துச்சமாக மதிப்பதுடன், வேலையேச் செய்யாமல் காலம் ஓட்டுபவர்களும் உண்டு.

அப்படி கவனமில்லாமல், நாம் செய்வது தவறு என்பதையே உணராமல் பணியாற்றுபவர்களால், பொதுமக்களுக்கு பல வேளைகளில் எண்ணற்ற இன்னல்கள் ஏற்படுகின்றன. அப்படியொரு, அரசு ஊழியர்களின் மெத்தனப்போக்குதான் தற்போது ஒரு மூதாட்டிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

குண்டு பல்பு (Blast bulb)

மத்திய பிரதேசத்தில் குணா மாவட்டத்தில் வசித்து வருபவர் ராம்பாய் ப்ராஜாபாட்டி. வீட்டு வேலை செய்து வரும் இவர் வீட்டில் ஒரு மின்விசிறியும் ஒரு குண்டு பல்புமே மட்டுமே பயன்படுத்தி வருகிறார். இந் நிலையில் இரண்டரை லட்ச ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளார் அவர்.

வழக்கமாக 500 ரூபாய்க்குள் கட்டணம் வரும் நிலையில், லட்சக்கணக்கில் மின்கட்டணம் வந்ததால் அது தொடர்பாக முறையிட மின்வாரிய அதிகாரிகளை சந்திக்க முயன்றுள்ளார்.

அதிகாரிகள் மெத்தனம் (The authorities are complacent)

ஆனால் பல நாட்களாக முயற்சித்த போதும் யாரும் கண்டுகொள்ளவில்லை என புகார் கூறுகிறார். இது குறித்து மாவட்ட ஆட்சியரையும் சந்தித்தபோதும் தனக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என ஆதங்கப்படுகிறார் மூதாட்டி.

அனைவரும் குற்றவாளிகள்தான் (Everyone is guilty)

உண்மையில் இவருடைய இந்த மனஉளைச்சலுக்கும், மனவேதனைக்கும் காரணம், கொஞ்சமும் அக்கறையின்றி மெத்தனப்போக்குடன் வேலை செய்ய மின் வாரிய ஊழியர்தான். இந்த விஷயத்தில், குற்றவாளி எனப் பார்க்கும்போது, மூதாட்டியை உதாசினப்படுத்தியவர்கள் அனைவருமே குற்றம் செய்தவர்கள். மின்கட்டணம் கட்டத் தவறும்பட்சத்தில் உடனடியாக மின்சாரத்தை கட் செய்து, நம்மைத் தவிக்க விடும் மின் வாரியத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

இழப்பீடு கிடைக்குமா? (Is compensation available?

எனவே இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், இந்த மூதாட்டியின் மனஉளைச்சலுக்கு இழப்பீடும் தர அரசு உத்தரவிடுமா? என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் படிக்க...

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசக் கொரோனாத் தடுப்பூசி - தமிழக அரசு!

கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!

தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!

 

English Summary: 2.5 lakh electricity charge for a bomb - frozen old woman in shock!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.