அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நோயாளிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாது என மருத்துவமனை நிர்வாகம் மறுத்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளை உலுக்கி எடுத்துவருகிறது. இதையடுத்து தொற்றுப்பரவலில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள ஏதுவாக கொரோனாத் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மக்கள் அரசின் நோக்கத்தைப் புரிந்துகொண்டும், நோய் தொற்றில் இருந்துப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் கொரோனாத் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
ஆனால் குறிப்பிட்ட சதவீதத்தினர், விதண்டாவாதம் பேசிக்கொண்டுத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் உள்ளனர். அப்படித் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஒருவருக்கு, அறுவை சிகிச்சை செய்ய ஒரு மருத்துவமனை மறுத்துவிட்டது. அமெரிக்காவில் நடைந்திருக்கிறது இந்த சம்பவம். பாஸ்டன் நகரில் உள்ள பிரிகாம் மருத்துவமனையில், 31 வயது நபர் ஒருவர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், அறுவை சிகிச்சைக்கான காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார்.
மருத்துவமனையின் கொள்கை
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை என்பதால், நோயாளிகள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற கொள்கையை மருத்துவமனை நிர்வாகம் கடைப்பிடிக்கிறது. இருதயத்தை மாற்றிய பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி கணிசமாக குறையும் என்பதால், தடுப்பு மருந்து இரண்டு செலுத்தப்படாத அவருக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யும் பட்சத்தில், வைரஸ் தாக்கம், இந்த நோயாளியின் உடலில் மரணத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நோயாளி தடுப்பு மருந்து செலுத்தப்படாதவர் என்பதால் தடுப்பு மருந்து செலுத்த மருத்துவமனை நிர்வாகம் ஆயத்தமாகியது. ஆனால் இவர் தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ள தனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம், தடுப்பு மருந்து செலுத்த விருப்பமில்லாத நோயாளிகளுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று கட்டாயமாக கூறிவிட்டது. இதனை அடுத்து அவர் தற்போது வேறு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் மொத்த மக்கள்தொகையில் 62 சதவீத மக்களுக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
ஒமிக்ரானால் ரத்து செய்யப்பட்டத் திருமணம் - நியூசிலாந்து பிரதமருக்கு வந்த சோதனை!
கொரோனா 3வது அலை எப்போது Endcard போடும்? நிபுணர்கள் விளக்கம்!