1. செய்திகள்

ஒமிக்ரானால் ரத்து செய்யப்பட்டத் திருமணம் - நியூசிலாந்து பிரதமருக்கு வந்த சோதனை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Marriage annulled by Omigran - test for New Zealand PM!

ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதித்த நிலையில், நியூசிலாந்து பிரதமர் தனது திருமண நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார். இந்தத் தகவலை பிரதமரே அறிவித்துள்ளார். உலக நாடுகளை ஆட்டம் காண வைத்துள்ள ஒமிக்ரான் நியூசிலாந்திலும், தன் கோரத் தாண்டவத்தை ஆடி வருகிறது.

ஒமிக்ரான் பாதிப்பு (Omicron vulnerability)

ஒமிக்ரான் தொற்று பாதிப்பு நியூசிலாந்தின் பல பகுதிகளிலும் வேகமாகப் பரவி வருகிறது.அந்நாட்டின் ஆக்லாந்து நகரில் இருந்து விமானத்தில் திருமணத்தில் கலந்து கொள்ள குடும்பம் ஒன்று சென்றுள்ளது. இதில் அந்த குடும்பத்தினருக்கும், விமான பணியாளருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. 9 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்புகள் அறியப்பட்டு உள்ளன.

கட்டுப்பாடுகள் (Restrictions)

இதனால், ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, முக கவசங்களை அதிகம் அணிவது, உணவு விடுதி உள்ளிட்ட இடங்கள், திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு அனுமதி ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், நியூசிலாந்து பிரதமர் தனது திருமண நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனது திருமணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். நியூசிலாந்து மக்கள் பலர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வருத்தம்

இது மிக அதிக வருத்தத்தினை ஏற்படுத்தி உள்ளது என கூறியுள்ளார். திருமணம் ரத்துபற்றி எப்படி உணர்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, வாழ்க்கை இதுபோன்றே இருக்கும் என பதிலளித்து உள்ளார்.

பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்னுக்கும், தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக உள்ள கிளார்க் கைபோர்டு என்பவருடன் கடந்த 2019ம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.

3 வயதில் மகள் (3 year old daughter)

நியூசிலாந்து நாட்டின் மிக இளம்வயது பிரதமரான ஆர்டென் கடந்த 2017ம் ஆண்டு கர்ப்பிணியாக இருந்தபொழுது பிரதமர் பொறுப்பேற்று கொண்டார். இந்த தம்பதிக்கு 3 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார்.

கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அக்டோபரில் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றார். அந்நாட்டில் கொரோனா பாதிப்புகள் பெருமளவில் குறைக்கப்பட்டு கட்டுக்குள் வைக்கப்பட்டு உள்ளன. இதற்காக அவர் சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

10 நாட்கள் தனிமைப்படுத்துதல் போதாது - புதிய ஆய்வில் தகவல்!

கொரோனா 3வது அலை எப்போது Endcard போடும்? நிபுணர்கள் விளக்கம்!

English Summary: Marriage annulled by Omigran - test for New Zealand PM! Published on: 23 January 2022, 10:56 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.