அசாமை சேர்ந்த காய்கறி வியாபாரி, ஓராண்டாக சேமித்து வைத்த நாணயங்களை கோணிப் பைகளில் எடுத்து வந்துள்ளார். அப்பணத்திற்கு இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் கனவாக இருந்தது. நேற்று இக்கனவை நிறைவேற்றி இருசக்கர வாகனம் வாங்கிய 'வீடியோ' சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டு பாராட்டுகளை குவித்து வருகிறது.
இரு சக்கர வாகனம் (Two Wheeler)
அசாமின் பார்பேட்டாவை சேர்ந்தவர் ஹபிஸுர் அகண்ட். காய்கறி சில்லரை வியாபாரம் செய்து வருகிறார். இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என்பது இவரதுபல ஆண்டு கனவாக இருந்தது. இதற்காக, கடந்த ஓராண்டாக நாணயங்களை சேமித்து வந்தார். சேமித்த நாணயங்களை கோணிப் பைகளில் கட்டி, இரு சக்கர வாகன விற்பனை நிலையத்திற்கு எடுத்து சென்றார். அவரது இரு சக்கர வாகன கனவு குறித்து அறிந்த விற்பனை நிலைய ஊழியர்கள் ஆச்சரியமடைந்தனர்.
நாணயங்களை பல கூடைகளில் கொட்டி, நான்கு பேர் எண்ணத் துவங்கினர். மூன்று மணி நேரம் எண்ணிய பின், அதில் 22 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரியவந்தது.
பல ஆண்டு கனவு (Long Time Dream)
அதை இரு சக்கர வாகனத்திற்கான முன் பணமாக வைத்து, மீதி தொகையை வாகன கடனாக அளித்தனர். இதன் வாயிலாக, காய்கறி வியாபாரியின் பல ஆண்டு வாகன கனவு நனவாகியது. இரு சக்கர வாகன விற்பனை நிலையத்திற்கு காய்கறி வியாபாரி வருவது, ஊழியர்கள் நாணயங்களை எண்ணுவது, இறுதியில் வாகனம் வாங்குவது வரையிலான காட்சிகளை, ஹிராக் ஜே.தாஸ் என்ற பிரபல, 'யு டியூப்' வலைப்பதிவர் தன் சமூக ஊடகத்தில் வெளியிட்டார். இது பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை குவித்து வருகிறது.
மேலும் படிக்க
போக்குவரத்து நெரிசலை குறைக்க அறிமுகமானது கடல்வழி டாக்ஸி திட்டம்!
இதைத் தெரிந்து கொண்டால் காய்கறித் தோல்களை இனி வீசியெறிய மாட்டீர்கள்!