மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குப் பணத்தைச் சேமித்து வைக்கும் சிறந்த திட்டங்கள் வேண்டுமா? அவையும் சில சந்தை அபாயங்களுடன் கூடிய முதலீடுகளில் முதலீடு செய்யத் தயாராக உள்ளீர்களா? அப்படியானால், நடுத்தரக் கால மியூச்சுவல் ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யலாம்.
ஆனால் டெட் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்முன் இந்த திட்டங்கள் நிலையற்றவை என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வரும் மாதங்களில் வட்டி விகிதங்கள் அதிகமாக உயரக்கூடும். பொருளாதாரத்தில் பணவீக்க அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மீண்டும் விகிதங்களை உயர்த்த வாய்ப்புள்ளதால் கவனமாக முதலீடு செய்தல் வேண்டும். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
செபியின் (SEBI) ஆணையின்படி, நடுத்தரக் காலத்திற்கான நிதிகள் கடன் மற்றும் பணச் சந்தை கருவிகளில் முதலீடு செய்ய விரும்பினால் மூன்று மற்றும் நான்கு ஆண்டுகள் மேலே முதலீடு செய்தல் வேண்டும் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும் மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்டுகளை இப்பதிவில் காணலாம். ஆனாலும், முதலீட்டு எல்லைக்கு இணங்க திட்டம் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதே நிலையில் திட்டத்தின் போர்ட்ஃபோலியோ கால அளவை முதலில் சரிபார்க்க வேண்டும்.
குறுகிய காலத்தில் முதலீடு செய்ய ஏற்ற மியூச்சுவல் திட்டங்கள்:
1. எஸ்பிஐ மேக்னம் மீடியம் டூரேசன் திட்டம் (SBI Magnum Medium Duration Fund)
2. ஆக்சிஸ் ஸ்ட்ரேட்டஜிக் பாண்ட் திட்டம்(Axis Strategic Bond Fund)
3. ஹெச்டிஎஃப்சி மீடியம் ட்ரெம் டெட் திட்டம் (HDFC Medium Term Debt Fund)
4. ஐடிஎஃப்சி பாண்ட் திட்டம் (IDFC Bond Fund Medium Term Plan)
இத்தகைய திட்டங்களை எடுப்பதற்கு முன் நன்கு அறிந்துகொண்டு, எடுத்தல் வேண்டும். எனவே, உரிய காலத்தில் எடுத்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கல்! தமிழக மக்களுக்கு ஜாக்பாட்.?