உலகளாவிய ஓய்வூதிய திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு பணியாளருக்கும் அவர்களது 60 வயதுக்குப் பிறகு குறைந்தபட்சம் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அமைப்புசாரா துறையினருக்கு மிகப்பெரிய நற்செய்தியினை வழங்கி இருக்கிறது. அமைப்புசாரா துறையினரின் தினசரி ஊதியம் பெரும் தொழிலாளிகள் மற்றும் சிறிய அளவிலான தொழிலாளர்கள் உள்ளிருப்பார்கள்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் ஓய்வூதியத் திட்டத்தின் கவரேஜை அதிகரிக்க முடிவெடுத்து உள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு பணியாளருக்கும் அவர்களது 60 வயதுக்குப் பிறகு குறைந்தபட்சம் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இபிஎஃப்ஓ-இன் இத்தகைய திட்டம் உலகளாவிய ஓய்வூதியத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது, இதில் மாதம் தோறும் ரூ. 15,000க்கு மேல் சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு கவரேஜ் இல்லை என்று கூறினாலும் அவர்களுக்கு ஒரு எளிய ஓய்வூதியத் தொகை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
இபிஎஃப்ஓ-இன் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், குழந்தைகள் ஓய்வூதியம், ஊனமுற்றோர் ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்படும். இந்த ஓய்வூதிய பலன்களை பெற பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளிலிருந்து பதினைந்து ஆண்டுகள் வரை சேவையில் பங்களித்திருக்க வேண்டியது அவசியம் எனக் கூறப்படுகிறது.
உலகளாவிய ஓய்வூதிய திட்டத்தில் பங்களித்திருக்கக் கூடிய உறுப்பினர் ஒருவர் 60 வயதிற்குள் இறந்துவிட்டால் அவரது குடும்பத்திற்கு இந்த திட்டத்தின்படி ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.3000 வரை ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் மாதந்தோறும் குறைந்தபட்சமாக ரூ.3000 என்கிற கணக்கில் மொத்தமாக ரூ.5.4 லட்சம் டெபாசிட் செய்திருக்க வேண்டும்.
மேலும் அதிகளவில் ஓய்வூதிய தொகையை பெற விரும்பும் உறுப்பினர்கள் அவர்கள் விருப்பத்தின் பேரில் அதிகளவிலான தொகையை டெபாசிட் செய்துகொள்ளலாம் என்று இபிஎப்ஓவின் மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) தெரிவித்திருக்கிறது.
மேலும் படிக்க
100 நாள் வேலை உறுதித் திட்டத்தை நிறுத்த முடிவா? அதிர்ச்சித் தகவல்!