சிட்டு குருவிகளுக்கு அடுத்ததாக அளிந்து வரும் நிலை தூக்கணாங்குருவிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் அதிகம் காணப்படும் தூக்கணாங்குருவி தமிழகத்தின் செழிப்புமிகுந்த பகுதிகளில் வளர்ந்து வருகின்றன. சிட்டுக் குருவிகளை போலவே தூக்கணாங்குருவிகளுக்கும் அளிந்து வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்களிடம் கேட்டப் பொழுது இந்த தூக்கணாங்குருவிகள் பனைமர உச்சியிலும், சில மரத்தின் கிளைகளிலும் கூடுகளைப் கட்டி குடும்பமாக இருப்பதை காணமுடியும். சில பறவைகளை பொந்துகளிலும் தனக்கான இருப்பிடத்தைப் அமைத்துக் கொள்கின்றன.ஒரு அற்புதமான கட்டிடக்கலைஞன் பறவையாய் பிறந்திருக்குமோ என்று ஆச்சர்யபடும் விதமாக இந்த பறவைகள் கூடுகட்டி வாழ்ந்து வருகிறது. மரங்கள் அழிந்துவரும் நிலையில், இனி நம் சந்ததியினர் தூக்கணாங் குருவிகளையும், அது கூடுகள் கட்டும் விதத்தையும் நேரில் பார்க்க முடியாது.
வேகமாக வீசும் காற்றில் கூட்டினுள் இருக்கும் முட்டைகள் கீழே விழாமல் இருப்பதற்காக, காற்றடிக்கும் திசைக்கேற்ப கூட்டின் நுழைவுவாயிலை தூக்கணாங்குருவி அமைத்துக்கொள்ளும். வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட தூக்கணாங்குருவியின் கூடுகள் மிக ஆச்சர்யம் தர கூடியவை. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோலும் மற்றும் இன்னும் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை போல் பயன்படுத்தி கூட்டை கட்டுகின்றன.
நகரங்களில் வசிக்கும் நம் தலைமுறையினரும் பார்க்க இயலாது. இவை மழைக்காலத்தின் தொடக்கத்தில் கூடமைக்கத் தொடங்குகின்றன. இனப்பெருக்கக் காலங்களில் தன்னுடைய முட்டைகளை அடைகாக்க கூடுகள் அவசியம். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு பறவையும் தனது சூழலுக்கேற்பவும், திறமைக்கேற்பவும் தான் வாழ்கிற கூடுகளை வடிவமைக்கின்றன.
கட்டிட கலைகளுக்கு எடுத்துகாட்டாக விளங்கும் தூக்கணாங்குருவிகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இருப்பது நாட்களுக்குள் தங்களுடைய கூடுகளை கட்டுவதற்கு ஆயிரம் முறையாவது அலைந்து திரிந்து வரும். ஆண் பறவைகளே கூடு கட்டுவதற்கு வெளியே செல்லும். மேலும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க ஒரு இயக்கம் அமைக்கப்பட்டதை போலவே தூக்கணாங்குருவிகள் பாதுகாக்கவும் அதற்கென ஒரு சரணாலயம் அமைக்க வேண்டும் என்றும் இயக்கமும் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பெருமளவில் இருந்த தூக்கணாங்குருவிகளின் எண்ணிக்கை, நீர்நிலைகளை பாதுகாக்காததால், மிக மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது.
மேலும் படிக்க: