அரசு ஊழியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிசீலித்து வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, வல்லுநர் குழு பரிந்துரைகளை நன்கு பரிசீலித்து, உரிய முடிவை மேற்கொண்டு அரசாணை வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதியத் திட்டம்
தமிழ்நாட்டில் கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையைக் கொண்டு அவர்களுக்கு ஓய்வூதியமும், அவர்களுக்குப் பிறகு அவர்களின் வாழ்விணையருக்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்படும். அதேநேரத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது.
மாறாக, அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் ஒரு பகுதி பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திரும்ப எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இது பயனற்றது என்பதால் பழைய ஓய்வூதியத்துக்கு மாற அரசு ஊழியர்களும், எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
பரிசீலனையில்
இந்நிலையில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான விவகாரம் பரிசீலனையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பானச் சாத்தியக்கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, தனது பரிந்துரைகளை தமிழக அரசிடம் ஏற்கனவே வழங்கியுள்ளது.
அவ்வாறு வழங்கப்பட்ட வல்லுநர் குழு பரிந்துரைகளை நன்கு பரிசீலித்து, உரிய முடிவை மேற்கொண்டு அரசாணை வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
முட்டைக்குள்ளும் Diet இருக்கு- தெரியுமா உங்களுக்கு!
நோயாளி வயிற்றுக்குள் சிக்கிய கத்திரி- அறுவை சிகிச்சையில் நடந்த அலப்பறை!