இன்றைய முதலீடு எதிர்காலத்திற்கான சேமிப்பு என்பதுதான் உண்மை. அதனால் நாம் செய்யும் முதலீடு பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்வது மிக மிக அவசியம். அந்த வகையில், ஐந்தே ஆண்டுகளில் நீங்கள் ரூ.15 லட்சம் சம்பாதிக்க உதவும் சூப்பர் திட்டம் ஒன்று உள்ளது. அதுதான் NSC திட்டம் !
குறிப்பாக நாம் சரியான இடத்தில் பணத்தை முதலீடு செய்தால்தானே அதிகமாக லாபம் ஈட்ட முடியும். அதற்கு அங்கும், இங்கும் அலையத் தேவையில்லை. தபால் அலுவலகம் போனாலே போதும். தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சேமிப்புத் திட்டங்களில் தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate) திட்டம் மிக முக்கியமான ஒன்றாகும். இதில் சேமிக்கும் பணத்துக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி-யின் கீழ் வரிச் சலுகை கிடைக்கிறது.
எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஏன், மைனர் பெண்கள் மற்றும் ஆண்கள்கூட, இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இணைப்புக் கணக்காகவும் இதில் முதலீடு செய்யலாம்.
தற்போதைய நிலையில் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் 6.8 சதவீத வட்டி கிடைக்கிறது. இத்திட்டத்தில் நீங்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ஐந்தே ஆண்டுகளில் உங்களுடைய கையில் ரூ.13.89 லட்சம் இருக்கும்.
ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையில் வரிச் சலுகை பெறலாம்.இத்திட்டத்தின் முதிர்வு காலத்துக்கு முன்னரே பணத்தை எடுக்க சில விதிமுறைகள் உள்ளன.
முதலீடு செய்தவர் இறந்துவிட்டாலோ, நீதிமன்ற தீர்ப்பின் பெயரிலோ எடுக்கலாம். டெபாசிட் செய்த முதல் ஆண்டே இந்த சான்றிதழை ரீடீம் செய்வதாக இருந்தால் அடிப்படை வட்டி மட்டுமே கிடைக்கும். அதேபோல, ஒன்று முதல் மூன்று ஆண்டுகளில் ரீடீம் செய்வதாக இருந்தால் தபால் நிலைய சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் வழங்கப்படும்.
மேலும் படிக்க...