உங்கள் வீட்டின் மின் கட்டணம் செலுத்த வேண்டுமா? நீண்ட வரிசையில் நிற்க விருப்பம் இல்லையா? இத்தகைய இடர்பாடுகள் உங்களுக்கு இருந்தால் இனி கவலை வேண்டாம். இனி மின் கட்டணத்தை வீட்டில் இருந்தபடியே கட்டலாம். வீட்டில் இருந்த படியே மொபைல் மூலம் மின்கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது என்பதைக் குறித்த விரிவான வழிமுறைகளை இப்பதிவில் பார்க்கலாம்.
ஒவ்வொரு மாதம் வந்துவிட்டால் மளிகை பில், தண்ணீர் பில், வீட்டு வாடகை என அனைத்துப் பில்களையும் கட்டுதல் எனப் பல்வேறு வேலைகள் இருக்கின்றன. அதனுடனே, ஈ.பி. பில்லும் வந்து சேர்ந்துக் கொள்கிறது. பிற கட்டணங்களுக்கு அதிக நேரத்தைச் செலவு செய்ய வேண்டியதில்லை. வரிசையில் நிற்க வேண்டியதும் இல்லை. ஆனால் மின் கட்டணத்தைச் செலுத்துவது அவ்வளவு எளிதல்ல.
குறிப்பிட்ட நாட்களுக்குள் மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்ற வரைமுறை இருக்கின்றது. அந்த நாளைக் கடந்து மின் கட்டணத்தைச் செலுத்தினால் அபராதம் விதிக்கப்படுகிறது. அதனாலேயே மின் கட்டணத்தைக் குறித்த நாளுக்குள் கட்ட மக்கள் மின் வாரிய அலுவலகத்தில் குவிந்து விடுகிறார்கள். இதனால் மக்கள் கூட்டம் திரளாக வரும் நிலை ஏற்படுகிறது. வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கின்றது.
இனி இந்த கவலை வேண்டாம். வீட்டில் இருந்த படியே உங்களின் மொபைல் மூலம் உங்கள் வீட்டிற்கான மின் கட்டணத்தைச் செலுத்தலாம். இந்த கட்டணத்தைக் கட்ட வெறும் குறைந்த பட்சம் 5 நிமிடம் போதும். மின் கட்டணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம், அதானி, மகாவிதரன் ஆகியவற்றின் அதிகாரப் பூர்வ இணைய தளத்தின் வாயிலாகக் கட்டலாம். அதோடு, நாம் பணப்பரிவர்த்தனை செய்யும் கூகுள் பே ஆப் (Google Pay) மூலமாகவும் இந்த மின் கட்டணத்தை விரைவில் கட்டலாம். இதில் கட்டுவதன் மூலம் கேஷ்பேக் ஆஃபர்களும், வவுச்சர்களும் உங்களுக்குக் கிடைக்கும்.
செய்முறை வழிக்காட்டுதல்
- மொபைலின் ப்ளே ஸ்டோரில் (Play Store) கூகுள் பே ஆப்-ஐ (Google Pay) பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- மின் கட்டணத்தைக் கூகுள் பே மூலமாகக் கட்ட வேண்டும் என்றால் முதலில் உங்கள் வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும்.
- கூகுள் பே ஹோம்பேஜ்-இல் உள்ள "Pay Bill" என்ற ஆப்ஸனைக் கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு “Electricity" என்ற ஆப்ஸனைக் கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு கரண்ட் ஏஜென்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- “Tamil Nadu Electricity Board (TNEB)" என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
- இப்பொழுது உங்கள் வீட்டின் மின்கட்டணத்திற்கான கன்ஸ்யூமர் நம்பர் மற்று பில்லிங் யூனிட் நம்பரைக் கொடுக்க வேண்டும்.
- இப்போது உங்கள் வீட்டின் மின் கட்டணம் திரையில் தெரியும்.
- திரையில் தெரியும் மின் கட்டண விவரங்களைக் கண்டு தெளிவு பெற்ற பின் மின் கட்டணத்தைச் செலுத்துங்கள்.
இவ்வாறு இனி வீட்டில் இருந்த படியே உங்கள் கையில் உள்ள மொபைல் மூலமாகவே மின் கட்டணத்தைச் செலுத்தலாம்.
மேலும் படிக்க