Others

Tuesday, 29 March 2022 10:38 AM , by: Elavarse Sivakumar

பைக் வாங்குவதற்காக இரண்டரை லட்சம் ரூபாய் மொத்தத்தையும் ஒரு ரூபாய் நாணயங்களாகவே வாடிக்கையாளர் வழங்கியது, ஷோரூம் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

கார், பைக் போன்றவற்றை ஷோரூம் சென்று, நமக்குப் பிடித்த மாடல் மற்றும் கலரைத் தேர்வு செய்து வாங்குவது வாடிக்கை. அதற்கான முன்பதிவுத் தொகை, ரொக்கமாகவோ, செக்காகவோ அளிப்பது வழக்கம். 

ஆனால் இங்கு பைக் வாங்க வந்த ஒருவர், தாம் செலுத்த வேண்டியத் தொகையைச் சில்லறையாக வழங்கினார். அதுவும் ரூபாய் நோட்டுகளால் அல்ல. ஒரு ரூபாய் நாணயங்களாக. நம்பமுடியவில்லை? இல்லை, நம்பித்தான் ஆக வேண்டும்.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள பைக் ஷோரும் ஒன்றில் பூபதி என்ற இளைஞர் பைக் வாங்குவதற்காக சென்றுள்ளார். தனக்கு பிடித்த மாடல் பைக்கை அவர் பதிவு செய்துவிட்டு அதற்கான பணத்தை கொடுத்த போது, ஷோரும் ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் இரண்டரை லட்சம் ரூபாய் மொத்தத்தையும் ஒரு ரூபாய் நாணயங்களாகவே அவர் கொண்டு வந்திருந்தார்.

ஏனெனில் Bike வாங்க வேண்டும் என்பது இவரது சிறுவயது ஆசை. அதனால் சிறுவயதில் இருந்து சிறுகச் சிறுகச் சேமித்து வைத்தச் சில்லறைக் காசுகளையேக் கொண்டுவந்ததாகக் கூறுகிறார். 

இதையடுத்து பூபதி, அவரது நண்பர்கள், ஷோரும் ஊழியர்கள் இணைந்து பல மணி நேரங்களாக அத்தனை நாணயங்களையும் எண்ணி முடித்தனர். இதன் பிறகு பூபதி தனது புதிய பைக்கை வாங்கிச் சென்றுள்ளார்.இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே!

மேலும் படிக்க...

பெண்கள் இளம்வயதில் பூப்படைவதற்கு பிராய்லர் கோழி காரணமல்ல!

கெட்டக் கொழுப்பைக் கரைக்க வேண்டுமா? இது ஒன்றே போதும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)