நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! உருளைக்கிழங்கு சாகுபடிக்கான இடுபொருட்களுக்கு மானியம்- வேளாண் மானியக் கோரிக்கையில் அறிவிப்பு கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! PM kisan 17 வது தவணை: பிரதமரின் முதல் கையெழுத்து விவசாயிகளுக்காக! NADCP திட்டம்: கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்க ஒரு வாய்ப்பு Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 19 June, 2024 11:24 AM IST
Parasram Yadav along with his family

தனது விவசாயப் பணிக்கு ஏற்ற பன்முகத் தன்மைக் கொண்ட டிராக்டர் இல்லாமல், அவதியடைந்து வந்த விவசாயினை வெற்றிப்பாதைக்கு கைப்பிடித்து அழைத்து சென்றுள்ளது மஹிந்திரா டிராக்டர். இந்த கட்டுரை மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பரஸ்ராம் என்கிற விவசாயியின் வெற்றிக்கதை. அவரது வாழ்வில் மஹிந்திரா டிராக்டர் நிகழ்த்திய அற்புதம் என்ன என்பதை இங்கு காண்போம் !

பரஸ்ராம் யாதவ் அவர்களின் முதன்மைத் தொழில் விவசாயம் தான். விவசாயப் பணிகளில் அவர் ஈட்டிய வருமானம் அவருடைய மற்றும் அவரது குடும்பத்தின் கனவுகளை நிறைவேற்ற போதுமானதாக இல்லை. ஆனால் இன்று சுமார் 90 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து லாபம் சம்பாதிக்கிறார். தனது கடின உழைப்பாலும், மஹிந்திரா டிராக்டர்ஸின் ஆதரவுடனும் ரூ.2 கோடி செலவில் ஆடம்பர வீடு ஒன்றையும் கட்டியுள்ளார்.

சோதனைக் காலத்தில் உதவிய டீலர்:

மகாராஷ்டிர மாநிலம் சிந்த்வாராவில் (Chhindwara) உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பராஸ்ராம் வசிக்கிறார். HMT டிராக்டரைப் பயன்படுத்தி விவசாயப் பயணத்தைத் தொடங்கினார். ஆனால் அது அவரது பண்ணைகளில் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. சிரமங்கள் அதிகரித்ததால், அவர் நம்பிக்கையை இழக்கத் தொடங்கினார் மற்றும் வேறு ஏதாவது முயற்சிகளை மேற்கொள்ள தனது HMT டிராக்டரை விற்க நினைத்தார்.

ஒரு நாள், பரஸ்ராம் தனது கவலைகளை அருகில் உள்ள டிராக்டர் டீலரிடம் பகிர்ந்து கொண்டார். அவரது நிலைமையைப் புரிந்து கொண்ட டீலர், மஹிந்திரா டிராக்டரை வாங்கி பயன்படுத்துமாறு பரிந்துரைத்தார். அப்போது, ​​புதிய டிராக்டர் வாங்க பரஸ்ராமிடம் போதிய பணம் இல்லை. அவரது நிலைமையை உணர்ந்த டீலர், மஹிந்திரா டிராக்டரை (15-day trial ) பரிசோதனை முயற்சியாக பயன்படுத்திக் கொள்ள உதவியுள்ளார். இந்த உதவியானது பரஸ்ராம் டிராக்டரினை வாங்குவதற்கு முன் அதன் செயல்திறனை மதிப்பிட உதவியுள்ளது.

அந்த வகையில் தனது நிலத்தில், பராஸ்ராம் டிராக்டரை ஏற்றுக்கொண்டு பயன்படுத்தத் தொடங்கினார். மஹிந்திரா டிராக்டர்களின் சிறப்பான செயல்திறனால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். டிராக்டரின் தரமும், அதன் செயல்திறனும் தனது விவசாயத்திற்கு புதிய பரிமாணங்களை சேர்ப்பதை அவர் கவனித்தார். 15 நாட்களுக்குப் பிறகு, எப்படியாவது பணத்தை ஏற்பாடு செய்து மஹிந்திரா டிராக்டரை வாங்க முடிவெடுத்தார். அன்று முதல் மஹிந்திரா நிறுவனத்திடம் இருந்து தற்போது வரை 18-20 டிராக்டர்களை வாங்கியுள்ளார்.

22 வருடக்கால நம்பிக்கை:

மஹிந்திரா டிராக்டர்ஸ் தனது விவசாயத் தொழிலில் புதிய புரட்சியை உருவாக்கியது என்கிறார் பரஸ்ராம். மஹிந்திரா டீலர்களும் டிராக்டர் தொடர்பான ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய பிரச்சனையிலும் பரஸ்ராமுக்கு உதவியதோடு, அவ்வப்போது தொழில்நுட்ப ஆதரவையும் வழங்கினார். 22 வருடங்களாக மஹிந்திரா டிராக்டர்களை பரஸ்ராம் பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது அவரது மகன்கள் மற்றும் பேரன்களும் விவசாயத் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர். பராஸ்ராம் கதை மற்றும் மஹிந்திரா டிராக்டரின் ஆதரவு ஆகியவை நம்மிடத்தில் சரியான கருவிகளும், கடின உழைப்பும் இருந்தால் எந்த கனவும் நனவாகும் என்பதை பிரதிபலிக்கிறது என்றால் மிகையல்ல. பராஸ்ரமின் மூன்று தலைமுறைகள் மஹிந்திரா டிராக்டர்களால் பயனடைந்துள்ளன. சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும் என்பதை நினைவில் கொள்க.

Read more:

மழையின் போது வெளிவரும் மண்வாசனை- இது தான் காரணமா?

இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? உணவு, உபகரணங்கள் இலவசம் !

English Summary: 3 generations of Maharashtra farmer Parasram have benefited from Mahindra Tractors
Published on: 19 June 2024, 11:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now