Success stories

Friday, 07 February 2025 05:11 PM , by: Muthukrishnan Murugan

Vimal Kumar, a progressive farmer from UP

விவசாயத்தில் வெற்றியை நோக்கி ஒரு அழகான பயணத்தை விமல் குமார் தனது முயற்சிகளின் மூலம் சாத்தியமாக்கினார். மஹிந்திரா 275 DI TU PP டிராக்டரின் உதவியுடன், அவர் தனது பண்ணையினை மேலாண்மை செய்வதில் மாற்றத்தைக் கொண்டு வந்தார்.

மஹிந்திரா 275 DI TU PP, தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தால் விவசாய பணிகளை வேகமாகவும் திறமையாகவும் செய்து முடிக்க உதவுகிறது. விமல் குமாரின் பண்ணை செயல்பாடுகள் இந்த டிராக்டரின் காரணமாக புதுப்பொலிவு பெற்றன. இதன் பல்வேறு பயன்பாடுகள் குறிப்பாக மண் உழவு, விதைத்தல் மற்றும் அறுவடை செயல்பாடுகளை சிறந்த முறையில் செய்ய உதவின.

சந்தித்த சவால்களும் அதற்கான தீர்வுகளும்:

உத்தரபிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள ராம்நகர் கிராமத்தைச் சேர்ந்த முற்போக்கான விவசாயியான விமல் குமார், குறைந்த முயற்சியுடன் அதிக உற்பத்தித்திறனை அடைய, மஹிந்திரா 275 DI TU PP டிராக்டரை தன் விவசாய பணிகளுக்குத் தேர்ந்தெடுத்தார். அவரைப் பொறுத்தவரை, இந்த டிராக்டர் சக்தி வாய்ந்தது மட்டுமல்லாமல், நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்த உதவுகிறது என்கிறார்.

விமலுக்கு விவசாய பணி கடினமாகவும், அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் விதமாகவும் இருந்தது. பாரம்பரிய கருவிகள் மற்றும் பழைய டிராக்டருடன், ஒவ்வொரு பணிக்கும் கூடுதல் நேரமும் முயற்சியும் தேவைப்பட்டது. இருப்பினும், மஹிந்திரா 275 DI TU PP டிராக்டரை வாங்கிய பிறகு, அவரது விவசாய அனுபவம் முற்றிலும் மாறிவிட்டது. இப்போது, ​​அவர் குறைந்த நேரத்தில் அதிக வேலைகளை முடிக்க முடிவதோடு, அவரது ஒட்டுமொத்த மகசூல் கணிசமாக மேம்பட்டுள்ளது.

மஹிந்திரா 275 DI TU PP சிறப்பம்சங்கள்:

தனது மஹிந்திரா 275 DI TU PP டிராக்டர் அனைத்து நிலைகளிலும் சிறந்த செயல்திறனை வழங்குகிறது என்று விமல் நம்புகிறார். அதன் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • சக்திவாய்ந்த இயந்திரம்: கடினமான சூழ்நிலைகளிலும் கூட தொடர்ந்து சிறந்த செயல்திறனை வழங்குகிறது.
  • குறைந்த டீசலுடன் அதிக வேலை: அதிக இயந்திர செயல்திறனை குறைந்த எரிபொருள் தேவையில் மேற்கொள்வதால் அதிகளவில் எரிபொருள் சேமிப்பில் விளைகிறது.
  • துல்லியமான ஹைட்ராலிக் அமைப்பு: பிற விவசாய கருவிகளை சிறப்பாக கையாளுவதை இந்த டிராக்டரிலுள்ள ஹைட்ராலிக் அமைப்பு உறுதி செய்கிறது.
  • பவர் ஸ்டீயரிங்: டிராக்டரினை இயக்குபவரின் சோர்வைக் குறைக்கிறது, வசதியான அனுபவத்தை ஓட்டுநருக்கு வழங்குகிறது.
  • 400 மணி நேர சேவை இடைவெளி: அடிக்கடி சர்வீஸ் செய்ய தேவையில்லை. இதனால் நேரமும், பணமும் மிச்சமாகிறது.

கடின உழைப்பின் பயன்கள்

விமல் குமார் விவசாயத்தில் கடின உழைப்பின் முக்கியத்துவத்தை நம்பியவர். சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அவர் நேரத்தைச் சேமித்தார் மற்றும் தனது விளைச்சலை அதிகரித்தார். அவரது முன்னேற்றம் மற்ற விவசாயிகளுக்கு ஒரு உதாரணமாக உள்ளது.

Mahindra 275 DI TU PP

வெற்றி பற்றிய அவரது கருத்து

"சரியான தொழில்நுட்பத்துடன் கடினமாக உழைத்தால் வெற்றியை அடையலாம்," என்று விமல் குமார் கூறுகிறார். மஹிந்திரா டிராக்டர் அவருக்கு ஒரு எளிதான தீர்வாக அமைந்ததோடு, அவரின் கனவுகளை நிறைவேற்ற உதவியது.

மஹிந்திரா 275 DI TU PP - விவசாயியின் நம்பிக்கை

இந்த டிராக்டர் உயர் தரத்துடன் கூடிய தகுதிகளை வழங்குகிறது. எரிபொருள் மிச்சமாக்கல், பல்பயன்பாட்டு திறன், மற்றும் நீண்ட ஆயுட்காலம் இதன் சிறப்பம்சங்கள் ஆகும். விமல் குமாரின் கதை, மஹிந்திரா டிராக்டர்களின் மீது விவசாயிகள் கொண்டிருக்கும் நம்பிக்கையை மேலும் வலிமைப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more:

ரூ.35.30 கோடி ஈவுத்தொகை: வளர்ச்சிப் பாதையில் தேசிய விதைகள் கழகம்

Kisan e-Mitra: விவசாயிகளுக்கு எப்படி உதவுகிறது கிசான் இ-மித்ரா ஏஐ?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)