Success stories

Wednesday, 19 April 2023 08:50 PM , by: T. Vigneshwaran

Fish Farming

திண்டுக்கல் மாவட்டம் விருவீடு அருகே உள்ள தர்மராஜபுரத்தில் உள்ள விவசாயி மணிகண்டன் இயற்கை முறையில் வண்ண மீன்கள் வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி மணிகண்டன், தனது தோட்டத்தில் 20 அடி அகலமும் 40 அடி நீளமும் கொண்ட சிமிண்ட் தொட்டியில் வண்ண மீன்களை இயற்கையான முறையில் வளர்த்து, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், அதிக அளவு கேரளா மாநிலத்திற்கும் அனுப்பி வருகிறார்.

இந்த மீன்களை இயற்கை முறையை பின்பற்றி, கம்பு, கேழ்வரகு, சோளம், தினை மற்றும் வரகு உள்ளிட்ட பல்வேறு தானிய வகைகளை மாவாக அரைத்து மீன்களுக்கு உணவாக கொடுத்து, வளர்த்து வருகின்றனர்.

மேலும் ( தாய் மீன்கள்) அதாவது குட்டி போடும் தருவாயில் உள்ள மீன்களுக்கு குளம், குட்டை பகுதிகளில், பாசனத்தில் இயற்கையாக வளரும் ரத்தப் புழுக்களை உணவாக கொடுக்கின்றனர். இந்த ரத்த புழுக்களை சாப்பிட்டால் தாய்மீன்களுக்கு கறிக்கஞ்சி சாப்பிட்ட திருப்தியும், அதிக சத்தும் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்.

இப்படி வளர்க்கப்படும் வண்ண மீன்களில், கோல்ட் ஃபிஷ், வாஸ்து மீன், பிளாக் மோர்ஸ், புளு கோல்டு, கொய் கார்ப், ஜிம் ஜிம் கொய், ஏஞ்சல், விடோடெட்ரா, பிளாட்டி, ரெட் ஸ்குவார்டு, ஜூப்ரா, க்ரீன் டைகர், மிக்கி மவுஸ் பிளாட்டி, சண்டை மீன், உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த மீன்கள் அனைத்தும் வாரம் ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை என தரம் பிரித்து , பிளாஸ்டிக் பைகளில் தண்ணீர் மற்றும் கேஸ் நிரப்பி பேக்கிங் செய்து , கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் மாதத்திற்கு 50 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வருவதாகவும், மேலும் கூடுதலாக முதலீடு செய்தால் இன்னும் கூடுதலாக வருமானம் பார்க்கலாம் எனவும் கூறுகிறார் திணடுக்கல் விவசாயி மணிகண்டன்.

மேலும் படிக்க:

பசு கிசான் கிரெடிட் கார்டு திட்டம் என்றால் என்ன? விவரம்!

சிறிய பாலிஹவுஸ்களை உருவாக்க 70 சதவீத மானியம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)