தமிழ்நாட்டில் என்ஜினியரிங் பட்டதாரிஇளைஞர்கள் படித்து முடித்த பிறகு பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வதற்குமுயற்சிகள் எடுத்தும் வேலையில்லாமல் திண்டாடும் சூழ்நிலை இருந்து வரும் நிலையில், கடந்த சில வருடங்களில் தமிழ்நாட்டில் பல இடங்களில் சிப்காட் தொழிற்சாலை மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் நிறுவப்பட்டு இளைஞர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.
என்ஜினியரிங் , தொழிற்கல்வி, கணினி அறிவியல்போன்ற பல்வேறு துறைகளில் சிறப்பான முறையில் பயின்று பட்டங்களை பெற்று வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் பல பட்டதாரிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், எவ்வளவு படித்தாலும் சுயதொழில் செய்யும் லட்சியம் உள்ள பட்டதாரி இளைஞர்களை அதிகமாக பார்க்க முடிகிறது. இதற்குஎடுத்துக்காட்டாக திகழ்கிறார், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில், EEE படித்த இளைஞர் சரவணன் . இவர் கடந்த 10 ஆண்டுகளாக தர்பூசணி வியாபாரம் மூலம் மாதம் 20,000 முதல் 30,000 வரை வருமானம் ஈட்டி வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள பழைய வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த ராசு-லட்சுமி தம்பதியினுடைய மகன் சரவணன் கடந்த 2005 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் தனது EEE படிப்பை முடித்து விட்டு, சென்னையில் தனியார் துரையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில்.கொரோனா கால ஊரடங்கு காரணமாகதனது சொந்த ஊரான வத்தலகுண்டு வந்து, வேலையில்லாமல் சில காலம் திண்டாடியுள்ளார்.
பிறகு, தர்பூசணி வியாபாரத்தை தொடங்கிய சரவணன், பழங்களை பாண்டிச்சேரி, திண்டிவனம் பொன்னேரி , ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று, பழங்களை தரம் பார்த்து கிலோ 10 முதல் 13 ரூபாய் வரை மொத்தமாக கொள்முதல் செய்து, நிலக்கோட்டையில் தள்ளுவண்டி கடை போட்டு பழங்களை மொத்தமாகவும், சில்லறை விலையிலும், சிறு சிறு துண்டுகளாகவும் நறுக்கி, ஒரு துண்டு 10 ரூபாய் விதமும்வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த வியாபாரம் மூலம் மாதம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் முறை வருமானம் ஈட்டுவருகிறார் பட்டதாரி சரவணன். வேலை வாய்ப்பு இன்றியும், வேலையில் போதிய சம்பளம் இன்றியும் இருக்கும் இளைஞர்கள் ஒருபுறம்,அரசு வேலைக்கு பட்டதாரி இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு படித்து வரும்சூழலில் மறுபுரம் என்றிருக்கும் நிலையில்,சுயதொழில் மூலமும்நல்ல வருமானம் ஈட்டி வரும் பட்டதாரி சரவணனை அப்பகுதி மக்கள் ஆதரித்து அவரிடம் பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.
மேலும் படிக்க: