பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 28 February, 2024 3:11 PM IST
Santosh Kite

வாழ்வில் நாம் எதிர்க்கொள்ளும் ஒவ்வொரு சவால்களையும், மன உறுதியுடன் தைரியமாகவும், நம்பிக்கையுடனும் எதிர்க்கொள்ளும் போது வெற்றியின் பாதையினை அடைகிறோம். சந்தோஷ் கைட்டின் கதையும் அப்படியொரு வெற்றிக்கதை தான். துவண்டு விடாத மன உறுதி தான் அவரின் வெற்றிக்கான காரணம்.

பாண்டுர்னாவின் டார்லி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் கைட். இவர் தனது ஐந்து வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். இளம் வயது முதலே உடல் ரீதியாகவும் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இருப்பினும் ஒவ்வொரு நாளும் மனம் தளராமல், தன்னம்பிக்கையுடன் சிறப்பு திறன்களை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு, சந்தோஷின் தந்தை இறந்தபோது, ​​குடும்பத்தின் கஷ்டங்கள் மேலும் அதிகரித்தன.

இதன் பின்னர் விவசாயத்தினை தொழிலாக தொடர முடிவு செய்து முழு நம்பிக்கையுடன் களத்தில் இறங்கினார் சந்தோஷ். 2014 ஆம் ஆண்டு விவசாய பணிகள் மற்றும் கால்நடை வளர்ப்பில் உள்ள சவால்கள், விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை என புதிய பிரச்சினைகளை எதிர்க்கொண்டார். இதற்கு தீர்வு காணவும், தனது எதிர்கால கனவுகளை நிறைவேற்றவும் பூசாட் (Pusad) செல்ல முடிவு செய்தார்.

Mahindra உறுப்பினர்களுடன் சந்திப்பு:

பூசாட்டில், (Pusad) மஹிந்திரா உறுப்பினர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. மஹிந்திரா குழுவினரின் உதவியுடன், ஒரு டிராக்டரை வாங்கி, அதை விவசாயத்துக்கு பயன்படுத்தத் தொடங்கினார் சந்தோஷ். இதன் மூலம் விவசாய பணிகளில் சந்தித்து வந்த சிரமங்களிலிருந்து குறுகிய காலத்திற்குள் மீண்டார். ஒரு டிராக்டரில் ஆரம்பித்து, இன்று நான்கு டிராக்டர்கள், சொந்த வீடு, தொழிலிலும் நல்ல வளர்ச்சி என தற்போது ஒரு சிறப்பான நிலையை அடைந்துள்ளார் சந்தோஷ்.

விவசாயப் பணிகளில் டிராக்டர்களைப் பயன்படுத்தியதன் மூலமும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு வேளாண் நடைமுறையில் மாற்றத்தை மேற்கொண்டதன் மூலமும் பல சவால்களை கடந்து தனது வணிகத்தை நிலைநாட்டியுள்ளார் சந்தோஷ். இதுக்குறித்து அவர் தெரிவிக்கையில், “வாழ்க்கையில் வெற்றிபெற, நாம் பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு அவற்றைச் சமாளிக்கும் தைரியம் நமக்கு இருக்க வேண்டும்” என்றார்.

அவர் இந்தப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றிப் பெற்றது மட்டுமின்றி, தனது உத்வேகமான நடவடிக்கைகளால் கிராம மக்களையும் ஊக்கப்படுத்தினார். அவரின் மிகப்பெரிய கனவாக இருந்தது, தனது கிராமத்தில் உள்ள அனைவரையும் தன்னிறைவு அடையச் செய்ய வேண்டும் என்பது தான். மனவலிமையும், அன்பானவர்களின் ஆதரவும், சரியான வழிகாட்டுதலும் இருந்தால் எத்தகைய சிரமத்தையும் சமாளிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.

சந்தோஷ் தனது வாழ்வினை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், கிராமத்தில் உள்ள அனைவரையும் வெற்றி நோக்கி நகர்த்த உத்வேகம் அளித்து வருகிறார். வெற்றிகரமான பயணத்திற்கு நாம் ஒருபோதும் மனதளவில் துவண்டுவிடக் கூடாது என்பது தான் சந்தோஷின் சித்தாந்தமாக உள்ளது. அவரின் செயல்பாடுகள் நிச்சயம் மற்றவர்களுக்கும் உந்துசக்தியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Read more:

திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்- ஒரே நாளில் ரூ.57 லட்சத்துக்கு மேல் வர்த்தகம்

மீன் வளர்ப்புக்கு 60 சதவீத மானியம்- போலி கால்நடை மருத்துவர்களுக்கு செக்மேட்

English Summary: A polio sufferer Santosh Kite Achieving agricultural work with a tractor
Published on: 28 February 2024, 03:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now