இன்று சட்டசபையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில் ஒன்று, என்னவென்றால், தமிழக சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராம ஊராட்சிகளுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இன்று சட்டசபையில், கிராம ஊராட்சித் தலைவர்களின் தலைமைப் பண்பினை வெளிக்கொணரக்கூடிய வகையிலும், சிறப்பாக நிர்வகிக்கக்கூடிய கிராம ஊராட்சித் தலைவர்களைப் பெருமைப்படுத்தும் வகையிலும், ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில், நான் துணை முதல்-அமைச்சராகவும், இத்துறையினுடைய அமைச்சராக இருந்தபோதும், கலைஞரால், ‘உத்தமர் காந்தி கிராம ஊராட்சி’ என்ற விருது 2006-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
10 முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்புடைய ஊராட்சித் தலைவர்களுக்கு நற்சான்றிதழ், கேடயம் மற்றும் ரொக்கத் தொகை வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருவதையும், முதலமைச்சர் சுட்டிக் காட்டினார்.
அந்த வகையில், 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை, 60 கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு, இந்த விருது வழங்கப்பட்டது என குறிப்பிட்டார். அதன் பிறகு இடைப்பட்ட காலத்தில், இவ்விருது வழங்கப்படவில்லை என்பதையும், அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகவே, இந்த ஆண்டு முதல் வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம். சிறப்பாகச் செயல்படக்கூடிய கிராம ஊராட்சிகளுக்கு “உத்தமர் காந்தி விருது” 2022 ஆம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும் என்பதையும், ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம், சிறந்த 37 கிராம ஊராட்சிகளுக்கு பத்து இலட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இவ் விருது வழங்க இருப்பதால், இதனைக் கருத்தில்கொண்டு, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், அந்தந்த ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளைத் திறம்படக் கண்காணித்திட ஏதுவாக, தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அவையில் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க:
மானிய விலையில் உரங்களை வாங்கி பயனடையுமாறு: அரசு வேண்டுகோள்
தமிழகம்: பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்