திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வீலிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஊட்டச்சத்து உதவி பேராசிரியை ரேவதி (Revathi) விவசாயியாக மாறி மண்புழு உர உற்பத்தியில் ஈடுபட்டுள்ளார். எம்.எஸ்சி., எம்.பில் ஊட்டச்சத்து முடித்தபின் மதுரையில் தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியையாக சேர்ந்தார்.
விவசாயப் பயிற்சி:
மதுரையில் சி.இ.டி. மையம் நடத்திய 45 நாட்கள் விவசாய பயிற்சி (Agriculture Training) வகுப்பில் சேர்ந்து, அங்கே கறவை மாடு வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மண்புழு உரத் தயாரிப்பு (earthworm compost) உட்பட பல்வேறு பயிற்சி பெற்றுள்ளார். நிலக்கோட்டையில் கொஞ்சம் நிலமும் ஒரு மாடும் இருந்ததால் மண்புழு உரத் தயாரிப்பை தேர்ந்தெடுத்துள்ளார். 23 சென்ட் நிலப்பரப்பில் முல்லைப் பூ செடிகளின் நடுவே 5 படுக்கைகளில் மாட்டின் சாணத்தை கொண்டு மண்புழு படுக்கை தயாரித்தார். சாணம் மட்டுமின்றி களைகள், சோளத் தட்டை, வேப்பமர இலை கழிவுகள் அனைத்தையும் உலரவைத்து உரப் படுக்கைக்கு சேர்த்துள்ளார். தரையில் படுக்கை அமைத்தபோது தண்ணீர் கூடுதலாக தேவைப்பட்டதால் 8 அடி நீளம், 4 அடி அகலத்திலும் 12 அடி நீளம் நீளம், 4 அடி அகலத்தில் பாலித்தீன் பைகள் வாங்கி அதில் படுக்கை அமைத்தார். இதற்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றினால் போதும்.
விற்பனை:
முதல் முறை ஆயிரம் கிலோ சாணத்தில் (Dung) கழிவு போக 700 கிலோ உரம் கிடைத்தது. 2வது முறை 3 டன் வரை உரம் எடுத்தேன். விவசாயிகளுக்கு வாட்ஸ் ஆப் குழு (Whatsapp Gtoup) மூலம் விற்பனை செய்து வருகிறார். விடுமுறை நாட்களில் கணவர் நாகராஜூடன் சேர்ந்து உரப்படுக்கைகள் தயாரித்து வருகிறார். மற்ற நாட்களில் அவ்வப்போது தண்ணீர் தெளிப்பதோடு சரி. அறுவடையின் (Harvest) போது மட்டும் வேலைக்கு ஆட்கள் வருவர். இப்போது தான் லாபம் கிடைக்கிறது. இன்னும் கூடுதலாக மண்புழு உரம் தயாரிக்க வெளியில் இருந்தும் சாணம் வாங்க ஆரம்பித்துள்ள இவர், சுயமாக தொழில் செய்வதால் குடும்பத்தையும் கவனித்து வருகிறார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
ஆன்லைனில் நர்சரி செடிகள் விற்கும் சக்திவேல்! மக்களிடையே அமோக வரவேற்பு
விளைபொருட்களுக்கு விலை கிடைக்காமல் திணறும் விவசாயிகளுக்கு, வேளாண் துறையின் ஆலோசனை!