வெட்டிவேர் விவசாயத்தை கையில் எடுத்துள்ள சீர்காழி கடைமடை விவசாயிகள். அதிக லாபம் தருவதாகவும் மற்றும் அரசு இதனை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குளிர்ச்சியும், மூலிகை தன்மையும் வாய்ந்த வெட்டிவேரால் பல்வேறு பயன்கள் உண்டு. உடல் சோர்வு, வறட்டு தாகம், வயிற்று புண் உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு மருந்தாக உள்ளது. இதே போன்று வாசனை திரவியம் மற்றும் தைலங்களில் வெட்டிவேர் மணமூட்டியாக செயல்படுகிறது.
90 நாள் பயிரான வெட்டிவேரை பல்வேறு நிலைகளுக்கு பிறகு பதமாக வெட்டி எடுக்கப்படும். இது குறித்து விவசாயி ராஜசேகர் கூறியதாவது: விவசாயத்தில் அதிக லாபம் கிடைக்காததால் மாற்று தொழிலாக வேறு ஏதாவது செய்வோம் என்று நினைத்த போது இந்த வெட்டிவேர் நினைவிற்கு வந்தது.
90 களில் இருந்து திருப்பதி தேவஸ்தானம், திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர், மதுரை ஆகிய கோவில்களுக்கு இந்த வெட்டிவேரை விற்பனை செய்து வருகிறேன். பின் இந்த வெட்டிவேரை நாமே சொந்தமாக விவசாயம் செய்தால் என்ன என்ற யோசைனை தோன்றியது அதன் பிறகே சாகுபடி செய்ய துவங்கினேன்.
நல்ல லாபகரமான தொழிலாகவும், இதில் முதலீடாக ரூ. 50 ,000 போட்டால் லாபமாக 50 முதல் 60 ஆயிரம் வரை நல்ல வருமானம் ஈட்ட முடியும் என்று கூறினார்.
வெட்டிவேரை முறையாக நட்டு பதியம் இடுகின்றனர். பின்னர் கடலை புண்ணாக்கை பாத்தியிற்கு 6 கிலோ வரை அடியில் வைத்து மூடி பதமாக தண்ணீர் தேக்கி வைக்கின்றனர். அறுவடைக்கு தயராக இருக்கும் வெட்டிவேரை சுற்றி பள்ளம் வெட்டி, தண்ணீர் ஊற்றி ஊற வைத்து நீண்ட நெடிய வேறை பிடுங்கி எடுக்கின்றனர்.
ஆரம்பத்தில் லாபம் எதுவும் எதிர்பார்க்காமல் கடவுளுக்கு உகந்தது என்று நம்பிக்கையுடன் இந்த வெட்டிவேர் விவசாயத்தில் இறங்கினோம். பின்னர் சிறிது சிறிதாக லாபம் வர துவங்கியதும் இதிலும் நல்ல பலன் உள்ளது என்று முழு மூச்சாக, தற்போது வெட்டிவேரை சாகுபடி செய்து வருகிறோம். இதனால் தினமும் வேலையும், நல்ல வருமானமும் கிடைக்கிறது என்று எடமணலை சேர்ந்த விவசாயி பண்ணீர்செல்வம் கூறினார்.
வெட்டிவேர் தெயிவீக தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. சீர்காழியில் சாகுபடி செய்யப்பட்டு இந்த வெட்டிவேரை திருப்பதி ஏழுமலையான் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், சிதம்பரம் நடராஜன் கோவில், ஸ்ரீவில்லிபுத்துர், சமயபுரம் என முக்கிய கோவில்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
உடலுக்கு நன்மையையும், பயிரிடுவோருக்கு லாபத்தையும் தரும் வெட்டிவேர் விவசாயத்தை அரசு ஊக்கப்படுத்தினால் மேலும் பயன் கிடைக்கும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நன்மைகள்
வெட்டிவேரை எலும்மிச்சை வேர் என்றும் கூறுவார்.
வெட்டிவேரை நன்கு சுத்தம் செய்து உலர்த்தி பொடி செய்து அதனுடன் பெருஞ்சீரகத்தை பொடி செய்து அரைத்து சம அளவில் வெந்நீரில் 200 மி.கி கலந்த குடித்து வந்தால் வயிற்றுப் புண், சரும அலர்ஜி, நீர் கடுப்பு ஆகியவை குணமாகும்.
வெட்டிவேரை நீரில் ஊற வைத்து அந்த நீரை தினமும் குடித்து வர காய்ச்சல், வயிறு ரீதியான கோளாறுகள், உடல் உஷ்ணம், நாவறட்சி, அதிக தாகம் ஆகிய அனைத்தும் தீர்வு பெரும்.
வெயிலில் ஏற்படும் வியர்வை, உடல் அரிப்பு, முகத்தில் எண்ணெ வடிவது, போன்றவற்றிக்கு வெட்டிவேரின் பவுடரை தேய்த்தும் மற்றும் நீரில் ஊற வைத்து அந்த நீரை கொண்டும் குளிக்கலாம்.
கால் வலிகள், மூட்டு வலிகள் போன்றவற்றிற்கு வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி இரண்டு நாட்கள் கழித்து வடிகட்டி வலி எடுக்கும் இடங்களில் தேய்த்து வர வலிகள் நீங்கும்.
காயங்கள், புண்கள், மறையாத தழும்புகள் போன்றவைகளுக்கு வெட்டிவேரின் எண்ணெய்யை தேய்த்து வர அனைத்தும் நீங்கிவிடும்.
K.Sakthipriya
Krishi Jagran