பாக்மல் குர்ஜரின் வெற்றிக்கதை விவசாய பணியில் ஆர்வம் மற்றும் புதுமையான தொழில்நுட்ப முறைகளை உள்ளடக்கிய விவசாயத்திற்கு ஒரு சான்றாகும். மஹிந்திரா டிராக்டர்கள் மூலம், அவர் தனது வேளாண் செயல்பாடுகளை மாற்றியமைத்து, உற்பத்தித்திறனை அதிகரித்துள்ளார். இவரின் செயல்பாடுகள் சக விவசாயிகளுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியதாக உள்ளது.
ராஜஸ்தானின் பில்வாராவைச் சேர்ந்த முற்போக்கு விவசாயியான பாக்மல் குர்ஜர் 18 ஆண்டுகளாக மஹிந்திரா டிராக்டரினை தனது வேளாண் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறார். மஹிந்திரா 275 DI TU PP டிராக்டரானது அவரது விவசாயத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தி, அதன் மூலம் உற்பத்தி மற்றும் தரத்தை உயர்த்தியுள்ளது.
தலைமுறைகள் தாண்டி விவசாயம்:
பாக்மாலின் குடும்பம் மூன்று தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகிறது. அவர்கள் 50 பிகாஸ் நிலத்தில் கோதுமை, தினை மற்றும் காய்கறிகளை பயிரிடுகிறார்கள். 2005 இல் அவர் தனது முதல் மஹிந்திரா டிராக்டரை வாங்கியபோது, அவரது பண்ணைகளும் அவரது வாழ்க்கை முறையும் வித்தியாசமான அழகைப் பெற்றன. ”மஹிந்திரா எனக்கு ஒரு பிராண்ட் மட்டுமல்ல; அது எனது பண்ணைகளில் மிகவும் நம்பகமான பங்குதாரர்” என்கிறார் பாக்மல்.
மஹிந்திரா 275 DI TU PP: நம்பகமான செயல்திறன்
பாக்மால் மஹிந்திரா 275 DI TU PP டிராக்டர் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறார். ஏனெனில் இந்த டிராக்டரின் மூலம் ஒவ்வொரு பணியையும் எளிமையாகவும் திறமையாகவும் செய்ய இயல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுக்குறித்து அவர் தெரிவிக்கையில், "அதன் சக்திவாய்ந்த எஞ்சின், சிறந்த எரிபொருள் திறன் மற்றும் வலுவான வடிவமைப்பு ஆகியவை ஒவ்வொரு சவாலான வேளாண் பணியையும் எளிதாக்குகின்றன. உழுவது, அறுவடை செய்வது மற்றும் சரக்குகளை ஒரிடத்திலிருந்து கொண்டு செல்வது எதுவாக இருந்தாலும், இந்த டிராக்டர் ஒவ்வொரு முறையும் சிறப்பாக செயல்படுகிறது” என்றார்.
மஹிந்திரா டிராக்டர் மூலம் விவசாயத்தில் புரட்சி காண்க
மஹிந்திரா டிராக்டர் உதவியுடன், பாக்மல் தனது விவசாயத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தியுள்ளார். இப்போது அவரது வயல்களில் ஒவ்வொரு வேலையும் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இது பயிரின் தரம் மற்றும் உற்பத்தி இரண்டையும் மேம்படுத்தியுள்ளது.
பாக்மல் குர்ஜார் மஹிந்திரா டிராக்டரின் தீவிர ரசிகரும் கூட. அவர் தனது நண்பர்கள் மற்றும் கிராமத்தில் உள்ள மற்ற விவசாயிகளையும் மஹிந்திராவினை வாங்கி பயனடையுமாறு அறிவுறுத்துகிறார். மஹிந்திராவின் நவீன மாடல்களின் தீவிர ரசிகரான அவர், புதிய தொழில்நுட்பத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் நம்மிடம் தெரிவித்துள்ளார். பாக்மல் தனது கதை ஒவ்வொரு விவசாயியையும் சென்றடைய வேண்டும் எனவும் விவசாயிகள் தங்கள் பண்ணைகளை மஹிந்திராவுடன் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லவும் விரும்புகிறார்.
பாக்மல் குர்ஜரின் கதை, ஆர்வமும் செயல்திறனும் ஒன்றாக இணைந்தால், வெற்றிக்கான பயணம் எதனாலும் தடைப்படாது என்பதை நிரூபிக்கிறது. பாக்மலின் வெற்றிப் பயணம் மஹிந்திரா மீதான விவசாயிகளின் நம்பகத்தன்மைக்கு ஒரு சான்றாகும்.
Read more:
கோமாரி நோய்க்கான தடுப்பூசி: கால்நடை விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுக்கோள்
எனது வெற்றிக்கான பங்காளி மஹிந்திரா டிராக்டர்: குர்மேஜ் சிங்கின் எழுச்சியூட்டும் கதை