
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த அக்கரை வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையன் விவசாயி. இவர் மகள் கோமதி(எ) ராஜலட்சுமி ஒரத்தநாடு அரசு கலை கல்லூரியில் பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் தந்தைக்கு அவ்வப்போது விவசாய வேளைகளில் உதவியாக இருப்பார்.
இந்நிலையில் இவர்களிடம் உள்ள ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் ஆழ்குழாய் பாசனம் மூலம் நெல் நாற்று தயார் செய்து வைத்திருந்தனர். ஆனால் நடவு செய்வதற்கு ஆட்கள் கிடைக்காததால் கோமதி தனியாளாக நடவு செய்ய முடிவு செய்து ஒரு ஏக்கர் நிலத்தில் மூன்றே நாளில் நெற்பயிர்களை நடவு செய்தார். 23 ஆம் தேதி காலை முதல் மாலை வரை பாதி நடவு செய்து, தொடர்ந்து 24 ஆம் தேதியும் மற்றும் நேற்று முன்தினம் காலையில் கல்லூரிக்கு சென்று விட்டு மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடவு வேலை முடிந்து விட்டது. இச்செயலை கண்ட அக்கம்பக்க விவசாயிகள் உதவிக்கு வந்த போது அன்புடன் அதை தவிர்த்தார்.
மற்றும் கோமதி கூறுகையில் தற்போது நடவு பணி முடிந்தது இதனால் எங்களுக்கு ரூ 5 ஆயிரம் கூலி மிச்சமானது என்றார். மாணவி கோமதியின் இச்செயலை அறிந்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள், இளைஞர்கள், பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
K.Sakthipriya
Krishi Jagran