லண்டன்: "கடின உழைப்பு பலனளிக்கிறது" என்ற பொதுவான சொற்றொடர் பெரும்பாலும் உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது, இப்போது பிரிட்டனைச் சேர்ந்த 43 வயதான டக்ளஸ் ஸ்மித் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறார். நாங்கள் எதைப் பற்றி பேசுகிறோம் என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? டக்ளஸ் ஸ்மித் ஒரே ஒரு செடியில் இருந்து 839 தக்காளியை வளர்த்து உலக சாதனை படைத்துள்ளார்.
தொழிலில் ஐடி மேலாளராக இருக்கும் ஸ்மித் இதை தனக்கு ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார். அவர் விதைகளிலிருந்து நேரடியாக தக்காளி செடியை வளர்த்துள்ளதாகவும், இந்த புதிய முயற்சியை செய்வதற்காக அதிக நேரம் செலவிட்டதாகவும் கூறப்படுகிறது, அதிக நேரம் செலவிட்டதற்கான பயனாக தனக்கு நல்ல விளைச்சல் கிடைத்துள்ளதாக கூறினார். அறிக்கைகளின்படி, ஸ்மித் மார்ச் மாதத்தில் தக்காளியை விதைத்தார். தக்காளியை வளர்ப்பதற்காக அவர் வாரத்திற்கு கிட்டத்தட்ட 3-4 மணிநேரம் தனது தக்காளி செடியில் செலவிட்டார் மற்றும் தக்காளி செடியை கிரீன்ஹவுஸில் வைத்திருந்தார்.
தான் விளைவித்த தக்காளியைப் பறிக்கும் நேரத்தில் அவர் உள்ளூர் போலீஸையும் அழைத்திருந்தார், இதனால் அது கின்னஸ் உலக சாதனைக்காக பரிந்துரைக்கப்பட்டு இடம் பெற்றது. அவர் தனது பண்ணையில் உள்ள ஒரே ஒரு தக்காளி செடியிலிருந்து மொத்தம் 839 தக்காளிகளைப் பறித்ததால், அங்கிருந்த மக்கள் ஆச்சரியமடைந்தனர். முன்னதாக, கிரஹாம் டான்டர் என்பவர் தக்காளிச் செடியின் ஒரு தண்டில் அதிக தக்காளி பயிரிட்டு சாதனை படைத்திருந்தார். 2010 இல், அவர் ஒரு தண்டு மூலம் 448 தக்காளியை வளர்த்து சாகுபடி செய்து சாதனை படைத்தார். இப்போது, டக்ளஸ் அதை விட இரண்டு மடங்கு தக்காளியை உற்பத்தி செய்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
ஸ்மித் சாதனை செய்வது இது முதல் முறை அல்ல, கடந்த ஆண்டு கூட, ஸ்மித் இதே போன்ற ஒன்றைச் செய்திருந்தார். அதாவது பிரிட்டனின் மிகப்பெரிய தக்காளி செடியை வளர்த்து புதிதாக ஒன்றை கண்டுபிடித்தார்.
மேலும் படிக்க...
அடிபம்பு மூலம் தண்ணீர் பாய்ச்சி இயற்கை விவசாயத்தில் அசத்தும் NRI தமிழச்சி!