எந்த ஒருத் தொழிலைச் செய்தாலும், அதற்கென ஒரு தர்மம் இருக்கும். அதைத் தெரிந்துகொண்டுத் தவறாமல் கடைப்பிடித்தால், வெற்றி நிச்சயம் என்பதைவிட, மற்றவர்கள் வியக்கும் அளவிலான உயர்வையும் எளிதில் எட்டிவிட முடியும்.
இதற்கு உதாரணம்தான் மகாராஷ்டிர மாநிலத்தின் பிவாண்டி பகுதியைச் சேர்ந்த கால்நடை விவசாயியான ஜனார்த்தன். இவரது பிரதானத் தொழில் என்றால் அது பால்வியாபாரம்தான்.
5 மாநிலங்களில் பால் பண்ணை (Dairy farms in 5 states)
ஆரம்பத்தில் சிறிய அளவிலான பண்ணைகளை வைத்து பராமரித்துவந்த ஜனார்த்தன், அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு,தொழிலில் காட்டிய ஆர்வம் உள்ளிட்டவற்றின் மூலம், தற்போது, பஞ்சாப், ஹரியானா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் தன்னுடைய பால்பண்ணையை விஸ்தரித்துள்ளார்.
விமானப் பயணம் (Air travel)
இதனால், 5 மாநிலங்களுக்கும் மாறி மாறி சென்று, வியாபாரத்தைக் கவனிக்க வேண்டியுள்ளது. இதற்காக விமானத்தில் அடிக்கடி பயணம் செய்தார் ஜனார்த்தனன்.
நாளடைவில், விமானத்திற்கு செலவிட்டத் தொகையைக் கணக்கிட்டபோது, நாம் ஏன் ஒரு ஹெலிகாப்டரை வாங்கக்கூடாது என சிந்தித்துள்ளார். இதன் விளைவாக, தற்போது 30 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டரை தனது பண்ணைப் பணிகளுக்காக முன்பதிவு செய்துள்ளார்.
ஹெலிகாப்டர் வாங்கியுள்ளார் (Helicopter purchased)
தன்னுடைய நண்பரின் ஆலோசனைப்படி, ஹெலிகாப்டர் வாங்க முன்வந்ததாகவும், பால் வியாபாரத்திற்காக அடிக்கடி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு பயணம் செய்ய, அது பெரிதும் உதவும் என நம்புவதாகவும் ஜனார்த்தன் கூறியுள்ளார்.
விமானநிலையம் இல்லாத பல பகுதிகளுக்கு அடிக்கடி செல்ல வேண்டியிருப்பதால், ஹெலிகாப்பரைத் தேர்வு செய்திருக்கிறார் இவர்.
ஹெலிபேட் (Helipad)
புதிய ஹெலிகாப்டர் இறங்கும் வசதிக்காக, தனது இரண்டரை ஏக்கர் நிலத்தில், ஹெலிபேட் அமைத்துள்ளார். அண்மையில் சோதனைக்காக ஹெலிகாப்டர் கொண்டுவரப்பட்டபோது, கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், அதில் உல்லாசப் பயணம் செய்தனர்.
ரூ.100 கோடி சொத்து (Rs 100 crore assets)
விவசாயம் மற்றும் கால்நடை விவசாயம் தவிர, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்கள் மூலம் பல ஆண்டுகளாக லாபம் ஈட்டிவரும், ஜனார்த்தனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? தெரிந்தால் மயக்கம் வந்துவிடும்.
அவரது சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய்.
ஹெலிகாப்டர் வரும் 15ம் தேதி ஜனார்த்தனின் வீட்டிற்கு வர உள்ளதால், அப்பகுதி மக்கள் அனைவரும் அதனைக்காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க...
உரிமையாளரின் உயிரைக்குடித்த சேவல் சண்டை!