நீங்கள் எந்த ஒரு வாழ்க்கை தொழிலை தேர்ந்தெடுத்தாலும் அது எளிதாக இருக்கும் என்று எண்ணிவிடக் கூடாது. அதில் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் வாழும் ஜெயேஷ் பாய், மோகன் பாய் படேல் கதையும் இதைப் போன்றதாகும். ஆரம்பத்தில் ஜெயேஷ் வியாபாரம் செய்து வந்தார். ஆனால் விவசாயத்தின் மீது அவருக்கு இருந்த அளவற்ற ஆர்வம் காரணமாக வியாபாரம் செய்வதை விட்டுவிட்டு விவசாயம் செய்வதற்கு வந்தார். அதற்காக அவர் தரிசு நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்ய தொடங்கினார். அவரை சுற்றி உள்ளவர்கள் அவர் தரிசு நிலத்தில் எப்படி விவசாயம் செய்கிறார் என்பதை காண்பதற்கு ஆவலோடு இருந்தார்கள். தரிசு நிலத்தில் ஜெயேஷ் கரும்பு மற்றும் பேரீச்சை பயிரிட்டார்.
விவசாயத்தின் மீது அவருக்கு இருந்த அதித ஆர்வம் மற்றும் அவரது தளரா மன உறுதி காரணமாக அவர் விவசாயத்தில் வெற்றி பெற்றார். அதன் விளைவாக ஒரு புதிய வெற்றிக் கதையை அவர் எழுதினார்.
பாரம்பரிய விவசாய முறைகளை தவிர்த்து விட்டு, புதிய விஞ்ஞான விவசாய முறைப்படி குறைந்த செலவில் கரும்பு மற்றும் பேரீச்சை பயிரிட்டார். தரிசு நிலத்தை நல்ல முறையில் பண்படுத்தினார். மண் பரிசோதனை செய்தார். அதன் பயனாக ஜெயேஷ் பாய் விவசாயத்தில் அதிக இலாபம் அடைந்தார்.
வெளிநாட்டிலிருந்து 12 வகையான திசு வளர்ப்பு பேரீட்சை கன்றுகளை இறக்குமதி செய்து நடவு செய்தார். ஒரு ஏக்கரில் 70 - 80 பேரீட்சை கன்றுகளை நடவு செய்தார். அவைகளில் இருந்து மரம் ஒன்றுக்கு 70 -80 கிலோ கிராம் பேரீச்சம் பழங்கள் கிடைத்தன. குஜராத் மாநிலத்தில் பேரீட்சை மரங்களில் இருந்து 18 மாதங்களில் பழங்களை அறுவடை செய்துள்ள முதல் விவசாயி ஜெயேஷ் பாய் ஆவர். சந்தையில் நல்ல விலை கிடைப்பதற்காக அவர் தனது பேரீச்சம் பழங்களை நல்ல முறையில் தரம் பிரித்து விற்பனை செய்து வருகிறர். விவசாயத்தில் இரசாயனங்களின் பயன்பாட்டை குறைக்கும் பொருட்டு அவர் இயற்கை உரங்களை பயன்படுத்தி வருகிறார். அதன் விளைவாக அவரது இரசாயனங்களின் பயன்பாடு 25% குறைந்துள்ளது. வரலாறு காணாத இவரது விவசாய வெற்றிக்காக இவருக்கு ஆத்மா (ATMA) விருது வழங்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் பேரீச்சை சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு இவருக்கு கன்று ஒன்றுக்கு ரூபாய் 1250 வீதம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.