நானும், எனது குடும்பமும் திராட்சை விவசாயத்தில் வெற்றிப்பெற மஹிந்திரா டிராக்டரின் நவீன தொழில்நுட்ப செயல்பாடுகள் பெரிதும் உதவியுள்ளன என மனம் திறந்து பேசியுள்ளார் திராட்சைத் தோட்ட விவசாயி ஹர்ஷத் ராகிபே. தங்களது அன்றாட விவசாய பணிகளுக்கு, மஹிந்திரா டிராக்டரின் மீது நம்பிக்கை வைத்துள்ள உலகம் முழுவதிலும் உள்ள 40 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுள் ஒருவர் தான் ஹர்ஷத் ராகிபே.
ராகிபேயும், அவரது குடும்பமும் தலைமுறை தலைமுறையாக மஹிந்திரா டிராக்டர் மீது நம்பிக்கை கொண்டவர்களாக திகழ்கின்றனர். அதற்கு காரணம், தனது விவசாய செயல்பாடுகளை எளிதாக மாற்றியதில் மஹிந்திரா டிராக்டருக்கு பெரும் பங்கு உண்டு என்றார் ஹர்ஷத். இதுக்குறித்து அவர் தெரிவிக்கையில், “எனது குடும்பத்தின் வளர்ச்சியில் மஹிந்திரா டிராக்டர்ஸ் முக்கியப் பங்கு வகித்துள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக, எனது குடும்பம் விவசாய பணிகளுக்காக மஹிந்திரா டிராக்டர்ஸுடன் கைகோர்த்து உள்ளோம். பொதுவாகவே மஹிந்திரா டிராக்டர்கள் விவசாயிகளின் ஒட்டுமொத்தத் தேவைகளை ஆராய்ந்து புதிய நவீன தொழில்நுட்ப வசதிகளை தனது டிராக்டரில் அறிமுகப்படுத்தி வருகிறது” என்றார்.
சவால்களை எளிதாக்கும் மஹிந்திராவின் வடிவமைப்பு:
மஹிந்திரா டிராக்டருக்கும், விவசாயிகளுக்கும் இடையே நிலவும் நெருக்கமான பந்தத்திற்கு ராகிபே புதியவர் இல்லை. தலைமுறை தலைமுறையாக மஹிந்திராவுடன் விவசாய பணிகளை மேற்கொண்டு வருவதில் மட்டடற்ற மகிழ்ச்சியை காண்கிறார் ராகிபே.
ஹர்ஷத் ராகிபே தனது விவசாய செயல்முறைகளை திறமையாகவும் லாபகரமாகவும் மாற்றுவதில் மஹிந்திராவின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மீது நம்பிக்கை வைத்துள்ளார். உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், நுண்ணறிவை பிரதிபலிக்கவும், தன்னியக்கத்தை (automatic) அதிகப்படுத்தும் வகையில் மஹிந்திரா டிராக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராகிபே மற்றும் அவரைப் போன்ற மில்லியன் கணக்கானோர் தங்கள் தொலைபேசிகளில் நேரடியாகக் கிடைக்கும் விவசாயிகளை மையமாகக் கொண்ட மற்றும் செயல்திறன்-உகந்த டிஜிட்டல் தரவு மூலம் பயனடைந்துள்ளனர்.
இதுக்குறித்து ஹர்ஷத் குறிப்பிடுகையில், “சாலையிலும், வயல்களிலும் எனது டிராக்டரின் செயல்திறன் குறித்த தினசரி புள்ளிவிவரங்களைப் பெறுகிறேன். மொபைல் செயலி மூலம் எனக்குக் கிடைக்கும் தொழில்நுட்பத்தால் டிராக்டரில் பராமரிப்பு மேற்கொள்வது எளிதாக உள்ளது. இதனால், எனது திராட்சைத் தோட்டங்களில் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்தவும், லாபத்தை அதிகரிக்கவும் எனக்கு மஹிந்திரா உதவியாக உள்ளது” என்றார்.
எரிபொருள் திறன் கொண்ட மஹிந்திரா:
மேலும் கூறுகையில், “திராட்சைத் தோட்டத்தை நிர்வகிப்பதில் ஏராளமான டிராக்டர் தொடர்பான செயல்முறைகள் உள்ளன. உதாரணத்திற்கு உழவு, விதைப்பு முதல் மருந்து தெளித்தல் மற்றும் அறுவடை வரை என பல விதமான பணிகளுக்கும் டிராக்டரின் தேவை இன்றியமையாததாக மாறியுள்ளது. நான் மஹிந்திரா டிராக்டரில் குறிப்பிட்ட தொழில்நுட்பங்களைத் தவிர, இந்த வாகனம் மிகவும் எரிபொருள் திறன் கொண்டதாக விளங்குவது தான் கூடுதல் சிறப்பு. இவை எனது பணம், நேரம் மற்றும் உழைப்பினை மிச்சப்படுத்துகிறது. இதனால் என் குடும்பம் மற்றும் என் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட என்னால் எளிதாக முடிகிறது” என்றார்.
விவசாயத் துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் விவசாயிகளுக்கும் மஹிந்திரா டிராக்டர்களுக்கும் இடையிலான கூட்டாண்மைக்கு ஹர்ஷத் என்கிற விவசாயி நல்ல சான்று எனலாம். விவசாயத் துறையில் புதுமைகளை முன்னெடுப்பதில் ஹர்ஷத்தின் அர்ப்பணிப்பு உணர்வினை பாராட்டுவதோடு, தலைமுறைத் தாண்டி உறுதியான விவசாயத் தேவைகளினை பூர்த்தி செய்யும் நண்பனாக இருப்பேன் என்று மஹிந்திரா உறுதியளிக்கிறது.
Read more:
கருகும் தென்னை- மரத்துக்கு ரூ.10000 இழப்பீடு வழங்க MP அன்புமணி கோரிக்கை
Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா?