நமது க்ரிஷி ஜாக்ரன் விவசாயக் குழு தற்போது நடைபெற்ற UPSC தேர்வில் வெற்றி பெற்ற விவசாயியின் மகள் ஹிமானியிடம் ஒரு இணையக் கருத்தரங்கை நடத்தியது. அதில் தானும் தனது தந்தை இந்திரஜித்துடன் கலந்து கொண்டார் ஹிமானி. விவசாயியின் மகளாக இருந்து எவ்வாறு வெற்றி பெற்றார் மற்றும் எப்படி சுலபமாக படிப்பது குறித்த பல விஷயங்களை விவசாய தளமான க்ரிஷி ஜாக்ரன் பேஸ்புக் நேரலையில் பகிந்துகொண்டதை காணலாம்.
சிர்சா மஜ்சிப்பூர் கிராமத்தில் மிகவும் எளிமையான குடும்பத்தில் எல்லாவற்றிற்கும் மேலாக விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஹிமானி, இவர் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் (UPSC) 323 வது ரேங்க் பெற்று அவரது குடும்பத்தினருக்கும் அவருடைய கிராமத்திற்கும் பெரும் பெருமையை சேர்த்துள்ளார்.
ஹிமானி ஜெவாரின் கதர் பகுதியில் உள்ள சிர்சா மஞ்சிபூர் கிராமத்தில் ஒரு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை விவசாயம் செய்து வந்தார், ஆனால் இப்போது அவர் விவசாயம் மட்டுமே செய்கிறார். தாய் மீனா ஒரு இல்லத்தரசி. ஹிமானியின் தந்தை சிறுவயதிலிருந்தே அவள் மிக விரைவாக வாசிப்பதாக கூறினார். ஆரம்பக் கல்விக்குப் பிறகு, ஜெவாரின் பிரக்யான் பப்ளிக் பள்ளியில் 6 ஆம் வகுப்பில் சேர்க்கை கிடைத்தது.
அங்கு அவரது மகள் எப்போதும் பள்ளியில் முதலிடம் பிடித்தார். "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" என்ற பழமொழிக்கு ஏற்ப தனது தந்தை தன்னுடைய 3 வது வகுப்பிலிருந்தே அவரை ஒரு IAS அதிகாரியாக பார்க்க வேண்டும் என்ற ஊக்கமளித்தாக கூறியுள்ளார். இந்த ஊக்கம் அவருக்கு கனவாக இருந்ததாகவும் மேலும் தான் மேற்படிப்பு படிக்க தொடங்கும் பொழுது தன்னுடைய கனவின் முக்கியத்துவமும் அதற்கான மேற்கொள்ளப்படும் பொறுப்பான படிகளையும் புரிந்து கொண்டதாக கூறினார்.
இவர் தேடி தந்த பெருமை அவருடைய குடும்பத்தோடு மட்டுமல்லாமல் அவருடைய கிராமம் மற்றும் நாட்டிற்கே பெருமை சேர்த்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சாதாரண விவசாய குடும்பத்திலிருந்து UPSC தேர்வு எழுதுவதற்கு தேவையான ஆற்றல், அறிவு, நம்பிக்கை, ஊக்கம் மற்றும் ஒத்துழைப்பு போன்ற அனைத்தும் தனது தந்தை தாய் மற்றும் தந்து அத்தையிடம் இருந்து கிடைத்ததாக கூறினார் வெற்றி மங்கை ஹிமானி.
தனது தாயும் அத்தையும் தனக்கு மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்ததாகவும், அச்சமின்றியும் தைரியசாலியாகவும் வளர்த்துள்ளதாகவும் கூறினார். இதனால் மட்டுமே தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தி இலக்கை அடைந்ததாக கூறினார். குடும்ப சூழ்நிலை என்று வரும் பொழுது தனது குடும்பம் அதிக சவால்களை சந்தித்ததாக கூறினார். இருந்தபோதிலும் சவால்களை குடும்பத்தின் ஆதரவுடன் சமாளித்துள்ளார்.
மேலும் முதுநிலை கல்வி படித்துக் கொண்டிருந்த போது UPSC தேர்வுக்கு தன்னை தயார் செய்ய தொடங்கியுள்ளார். ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் படித்ததாக கூறினார். மேலும் காலை நேரங்களில் மிகவும் புத்துணர்வோடு அதிக நேரம் படிக்க முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார் வெற்றி மங்கை ஹிமானி. சிறுவயதிலிருந்தே ஹிமானிக்கு படிப்பில் அதிகம் ஆர்வம் இருந்துள்ளது.
மேலும் படிக்க...