வருடத்திற்கு 4000 குவிண்டால்- உருளை சாகுபடியில் அசத்தும் உ.பி. விவசாயி ! அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 6 June, 2024 4:03 PM IST
ICAR IIHR honors Meenakshi Sundaram

சமீபத்தில் பெங்களூரு மாநிலம் ஹெசரகட்டாவில் உள்ள ஐசிஏஆர்-இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR-IIHR) முப்பழங்களின் (மா, பலா, வாழை) கண்காட்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, மாம்பழம், பலாப்பழம் மற்றும் வாழை மரபணு வகைகளைப் பாதுகாப்பதில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஏழு விவசாயிகளுக்கு "பாதுகாவலர் விவசாயிகள்" என்ற விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

அந்த ஏழு விவசாயிகளுள் ஒருவர் தான் மீனாட்சி சுந்தரம். கடந்தாண்டு (2023) டிசம்பர் மாதம் கிரிஷி ஜாக்ரன் சார்பில் முன்னெடுக்கப்பட்ட மில்லினியர் விவசாயிகளுக்கான விருதினையும் மீனாட்சி சுந்தரம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஏக்கர் பரப்பளவில் விவசாயப்பணி:

இந்நிலையில் மீனாட்சி சுந்தரம் அவர்களின் விவசாயப் பின்னணி என்ன?  மதிப்புக் கூட்டு முறையில் எவ்வாறு ஈடுபடுகிறார்? என்ன மாதிரியான விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறித்து தெரிந்துக் கொள்வதற்காக கிரிஷி ஜாக்ரன் அவருடன் தொலைபேசி வாயிலாக நேர்க்காணல் மேற்கொண்டது. அவற்றின் விவரம் பின்வருமாறு-

மீனாட்சி சுந்தரம், இந்தியாவின் கடைக்கோடியான கன்னியாகுமரி மாவட்டத்தினை சார்ந்தவர். எறும்புக்காடு என்னும் பகுதியில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார். நீங்கள் விவசாய பணியில் இறங்கியது எப்போது? என்ன மாதிரியான பயிர்களை பயிரிடுகிறீர்கள்? என நாம் கேள்வி எழுப்பியிருந்தோம்.

அதற்கு, ” நான் விவசாய குடும்ப பின்னணியை சார்ந்தவன் தான். என் தந்தை 3 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வந்த நிலையில் அதனை விட்டுவிட்டு முழுநேரமாக விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார். நான் M.A. (English) பட்டதாரி, குடும்பத்திற்கும் ஒரே பிள்ளை என்ற நிலையில் படிப்பு முடிந்த கையோடு விவசாயத்தில் இறங்கினேன். முன்னதாக தாத்தா காலத்தில் இவ்வளவு தென்னை, வாழை எல்லாம் கிடையாது. அவர்கள் அப்போதைய காலத்தில் மா, பலா போன்றவற்றை சாகுபடி செய்தார்கள். அதன்பின் அப்பா ஆரம்பக்காலத்தில் நெல் சாகுபடியிலும், தனது இறுதிக்காலத்தில் தென்னை நடவு பண்ணி ஊடுபயிராக வாழை பயிரிட்டார்கள். இப்போது நான், அவற்றுடன் பலதரப்பட்ட பயிர்களை பயிரிட்டு வருகிறேன்.”

“வாழை என்று எடுத்துக் கொண்டால், அதில் செவ்வாழை, மட்டி, சிங்கன், கதலி, பூங்கதளி உட்பட பல்வேறு வாழை இரகங்களை பயிரிடுகிறேன். சுழற்சி முறையில் மாற்றுப் பயிராக, மக்காச்சோளம், உளுந்து, பச்சை பயறு, சோளம் போன்றவற்றையும் பயிரிட்டு வருகிறேன்” என்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத் தலைவராக பதவி வகிக்கும் மீனாட்சி சுந்தரம், விளைப்பொருட்களை மதிப்புக் கூட்டு முறையில் விற்பனை பொருட்களாக தயாரித்தும் லாபம் பார்த்து வருகிறார். இதன் மூலம் அப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு முன்னோடியாகவும் திகழ்கிறார்.

வரவேற்பை பெற்ற பாரம்பரிய உருக்கு எண்ணெய்:

தற்போது தென்னை சார்ந்து மதிப்பு கூட்டு முறையில், பாரம்பரிய உருக்கு எண்ணெய் (virgin coconut oil) தயாரித்து வருகிறார். இதற்கு ஹைத்ராபாத், பெங்களூரு, உட்பட தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும், தேங்காய் கொப்பரைகளை சோலார் உலர்த்தி (solar Dryer) மூலம் காய வைத்து, மரச்செக்கின் மூலம் எண்ணெய் தயாரித்து அதனையும் விற்பனை செய்து வருகிறார்.

இவற்றுடன் கூடுதலாக, நல்லெண்ணெய் மற்றும் கடலெண்ணெய் தயாரிப்பிலும் ஈடுபட்டு வரும் மீனாட்சி சுந்தரம், சூரிய காந்தி எண்ணெய் தயாரிப்பில் சோதனை முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

Read also: Stop Banana Green: வைரலாகும் டெஸ்க்டாப் வாழைப்பழம் வளர்ப்பு !

வாழை இரகத்திற்கான பாதுகாவலர் விருது:

சமீபத்தில் பெங்களூருவில் ICAR-IIHR சார்பில் நடைப்பெற்ற நிகழ்வில் கௌரவிக்கப்பட்டது குறித்தும், இதற்கான வாய்ப்பு எப்படி அமைந்தது என்பது குறித்தும் நாம் கேள்வி எழுப்பியிருந்தோம்.

இதற்கு, “ ஒரு வருடத்திற்கு முன்பு, தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் சார்பில் சிறந்த விவசாயிக்கான விருது பெற்றிருந்தேன். NRCB (National Research Centre for Banana) சார்பில் வெளியிடப்படும் புதிய வாழை இரகங்களை எனது தோட்டத்தில் பரிசோதனை முயற்சியில் பயிரிட்டு, விற்பனையில் அவற்றின் லாபம், நஷ்ட விகிதங்கள், பராமரிப்பில் உள்ள இடர்பாடுகள் போன்ற அனைத்து தகவல்களையும் சேகரித்து அதை ஆவணப்படுத்தி அவர்களிடம் அளிப்பேன். அப்போது இருந்தே, எனது வேளாண் பணிகளில் நான் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கு NRCB உறுதுணையாக இருந்து வருகிறது”.

“இந்த பெங்களூரு நிகழ்விலும், நான் பயிரிட்டு வரும் 20-க்கும் மேற்பட்ட வாழை இரகங்களை காட்சிப்படுத்த அவர்கள் வேண்டுக்கோள் விடுத்திருந்தார்கள். அதன் விளைவாக , நிகழ்வுக்கு அழைத்து என்னை கௌரவப்படுத்தியுள்ளார்கள். ICAR-IIHR சார்பில் கௌரவிக்கப்பட்டது மனதளவில் ஒரு மகிழ்வான தருணம்.” என்றும் தெரிவித்தார்.

Read more:

5 ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரை- ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டத்தின் சிறப்பம்சம்!

Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!

English Summary: ICAR IIHR honors Kumari district farmer who cultivates more than 20 varieties of banana
Published on: 06 June 2024, 04:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now