விவசாயமும் ஒரு கலைதான், நெழிவு சுளிவுகளை சீராக ஆராய்ந்து தெரிந்துகொண்டால், அதிக மகசூலும், நிகர லாபமும் சாத்தியமே. அந்த வகையில், தேனீ வளர்ப்பில் முத்திரை பதித்து, முழுக்க முழுக்கத் தரமான, பரிசுத்தமானத் தேன் விற்பனை செய்து வருகிறது கோவை சங்கனூரில் இயங்கிவரும் மருதம் ஹனி நிறுவனம்.
இதன் உரிமையாளர் மணிகண்டன் கிருஷி ஜாக்ரன் தமிழ்நாடு ஃபேஸ்புக் பக்கத்தில், Farmer the Brand நிகழ்ச்சியின் மாதாந்திர நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியின் ரகசியம் குறித்து மனம் திறந்து பேசினார்.
மகரந்தசேர்க்கைக்கு தேனீ
அப்போது விவசாயிகள் தங்கள் தோட்டத்தில், தேனிப்பெட்டியை வைத்து தேனீ வளர்ப்பதன் மூலம் 40 சதவீதம் மகசூலை கூடுதலாகப் பெற முடியும் என உறுதியளித்த அவர், அவ்வாறு தேனீ வளர்க்கவும், தேனை மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றி விற்பனை செய்யவும், காரமடை கேவிகே(KVK)வும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும்(TNAU) தமக்கு ஆதரவுக் கரம் நீட்டியதையும் நினைவுகூர்ந்தார்.
இவ்விரு அமைப்புகளின் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதல்களே, தங்கள் நிறுவன வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்திருப்பதாகவும் மணி கண்டன் கூறினார்.
தேனீ வளர்ப்பு, தொழில் தொடங்குவதற்கான யுக்தி ஆகியவற்றை வேளாண் பல்கலைக்கழகத்தின் 2 மாத கால பயிற்சி கற்றுத்தந்தது, அத்துடன் இயற்கை முறை விவசாயம் செய்வோரின் தோட்டத்தில், தேனீப் பெட்டிகளை வைப்பதால், தேனீக்களின் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்தது என்றார்.
விவசாயம் என்பது ஷேர் மார்க்கெட் மாதிரிதான். ஒரு தொழிலிலேயே முதலீடு முழுவதையும் போடுவதற்கு பதிலாக மாடு, ஆடு, கோழி மற்றும் வாத்து போன்ற உப தொழில் வளர்ப்பையும் ஒருங்கிணைத்துக்-கொண்டால், அண்டு முழுவதும் லாபம் ஈட்ட முடியும் என்றும் கூறுகிறார் மணிகண்டன் அவர்கள்.
உலகம் முழுவதும் சுமார் 20,000க்கும் மேற்பட்ட தேனீக்கள் இருந்தாலும் அதில் 5 வகை தேனீக்கள் மட்டுமே உணவு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறும் இவர், தேனீக்கள் பொதுவாக இருட்டிலும், வெளிச்சத்திலும் வாழும் தன்மைகளை உடையதாக உள்ளது என்றும், இதில், அடுக்கு தேன் மற்றும் கொசுத்தேன் ஆகியவை இருட்டிலும் கொம்புத்தேன் மற்றும் மலை தேன் ஆகியவை வெளிச்சத்தில் வாழக்கூடியது. இதில் இந்திய அடுக்கு தேனீக்களையே தாம் அதிக விற்பனை செய்து வருவதாக குறிப்பிட்டுகிறார் மணிகண்டன் அவர்கள்.
தேனீக்களில் முக்கியமானது 5 வகைகள். அவை மலைத்தேன், கொம்புத்தேன், கொசுத்தேன். இதில் பொந்துகளில் வாழும் கொடுக்கு இல்லை என்பதால், அவை கொட்டாது. இவற்றை அனைவரும் அச்சமின்றி வளர்க்கலாம் என்று யோசனை கூறும், மணிகண்டன், தங்கள் தேனில், preservative எதுவும் சேர்க்கப்படாததால், தரம் மேம்படுவதுடன், ஊட்டச்சத்துக்கள் எதுவும் அழிவதில்லை என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து முருங்கைத்தேன் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தேனீ வளர்க்க முன்வருவோருக்கு, தேன் பெட்டியும் வழங்கி அனைத்து வழிகாட்டுதல்களையும் அளித்து, அவர்களிடம் இருந்து தேனை விலைக்கு வாங்கிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.தேனி வளர்க்கும் பெட்டி, அதற்கான ஸ்டான்ட் ஆகியவற்றை 2 ஆயிரம் 800 ரூபாய்க்கு அமைத்துத் தருவதாகவும் மணிகண்டன் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க...
அனைத்து ரக வெங்காய ஏற்றுமதிக்கும் தடை- மத்திய அரசு அதிரடி!
பண்டிகை காலத்தை முன்னிட்டு சாமந்தி நாற்றுகள் விற்பனைக்கு தயார்- விவசாயிகள் கவனத்திற்கு!