மண்ணையும், மனிதனையும் மலட்டுத்தன்மையில் இருந்து மீட்டெடுக்கும் வரப்பிரசாதமே இயற்கை விவசாயம். இதனை விவசாயிகள் அனைவரும் கையில் எடுத்துக்கொண்டால், ஆரோக்கியமான சமுதாயத்திற்கு அடித்தளம் அமைக்கலாம்.
அந்த வகையில் பெங்களுரில் IT நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றிவரும், சுரேஷ்குமார் என்ற இயற்கை விவசாயி, 24 மணி நேரமும், வயலில் இருந்தபடியே அலுவலக வேலையையும் செய்துகொண்டு அதிக மகசூலும், நிறைந்த வருமானமும் ஈட்டிவருகிறார்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் டி.வி.புதூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் கிருஷி ஜாக்ரன் தமிழ்நாடு ஃபேஸ்புக் பக்கத்தில், Farmer the Brand நிகழ்ச்சியின் மாதாந்திர நிகழ்ச்சியில் பங்கேற்று தனது வெற்றியின் ரகசியம் குறித்து மனம் திறந்து பேசினார்.
அவர் பேசியதில் இருந்து,
2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை விவசாயத்தில் விளைவித்து வருகிறேன். இந்த நெல் ரகங்கள் எண்ணற்ற மருத்துவகுணங்களைக் கொண்டுள்ளதால், மக்களிடமும் அமோக வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் தேவை அதிகரித்துவருகிறது. ஆனால் அந்த அளவுக்கு சப்ளை செய்ய முடிவதில்லை.
சாகுபடியைப் பொருத்தவரை, இயந்திரம் மூலம் நடவு, பஞ்சகவ்யா, அமிர்தக்கரைசல், புண்ணாக்கு வகைகள், சாணம், வெல்லம்,எரு உள்ளிட்ட அனைத்தையும் கரைசலாக மாற்றி தண்ணீரில் சேர்த்து குழாய் மூலம் தரைவழியாகவே பயிருக்கு அளிக்கிறேன்.
நெல்விதை விற்பனை (Paddy Seed)
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான அரிசிகளில், ஓட்டடையான், காட்டு யானை அரிசி, கருங்குறுவை, கருப்புக்கவுனி, பர்மா கருங்ககவுனி உள்ளிட்ட பலவற்றை சாகுபடி செய்து விற்பனை செய்கிறோம். குறிப்பாக நெல்லை விதையாக விற்பனை செய்யும்போது அதிக லாபம் கிடைக்கிறது. இதுவே இயற்கை விவசாயத்தில் நிலைத்து நிற்கவும் உதவுகிறது.
2வது வருமானம் (Second income)
இயற்கை விவசாயத்தை செய்ய விரும்புபவர்கள், தங்கள் வேலையை விட வேண்டிய அவசியமில்லை. துணைத்தொழிலாக குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் செய்து, இந்த வருமானத்தை இரண்டாவது வருமானமாக வைத்துக்கொள்வதன் மூலம் இழப்பையும் ஈடுசெய்ய முடியும். அதிக வருமானமம் ஈட்ட முடியும்.
அதேநேரத்தில் நாமே வயலில் இறங்கி வேலைசெய்து செலவீனங்களைக் குறைத்து, விற்பனை செய்வதன் மூலமும் அதிக லாபம் ஈட்ட முடியும். எங்கள் அசிரி மற்றும் விதைநெல்லை விற்பனை செய்ய 8 விவசாயிகள் சேர்ந்து பொன்னியார் என்ற குழுவை வைத்து, ஒருவருக்கொருவர் உதவி செய்து வியாபாரம் பார்க்கிறோம்.
ஆகவே இயற்கை விவசாயம் செய்ய ஆர்வமுள்ளவர்கள், முதலில் இயற்கை விவசாயி ஒருவருடன் இணைந்து சில மாதங்கள் அவரது வயலில் வேலைசெய்து, நெளிவு சுழிவுகளைத் தெரிந்துகொண்டு களமிறங்குவது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு
சுரேஷ் குமார்
இயற்கை விவசாயி
8073573403
மேலும் படிக்க...
ஷேர் மார்க்கெட் டெக்னிக்- விவசாயத்திலும் டபுள் லாபம் ஈட்டலாம்!
இயற்கை விவசாயம் செய்ய நீங்க ரெடியா? கைகொடுக்கிறது விஜய் ஆர்கானிக்ஸ்!