
கிருஷி ஜாக்ரனின் ''Farmer the brand'' நிகழ்ச்சியின் மாதாந்திர திருவிழா வரும் செப்டம்பர் 5ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் வேளாண் பொருட்களைச் சிறப்பாகச் சந்தைப்படுத்தும் விவசாயிகள், தங்களின் வேளாண் பொருட்களைச் சந்தைப்படும் யுத்திகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
விவசாயமே இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த விவசாய பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள் பெரும்பாலும் அடையாளம் காணப்படுவது இல்லை, குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் விவசாயிகள் தங்களின் விளைப்பொருட்களைச் சந்தைப்படுத்திக் கொள்ள முறையான வழிகாட்டுதல் கிடைக்கப்பெறுவது இல்லை.இதனால் பெரும்பாலான விவசாயிகள் தங்களின் தரமான விளை பொருட்களுக்கு சொந்தகாராராக முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே தான் திறமையான விவசாயிகளை அடையாளம் காணவும், அவர்களின் விளை பொருட்களைச் சந்தைப்படுத்தவும் கிருஷி ஜாக்ரன், உழவர் உலகம் சார்பில் விவசாயிகளை அடையாளப்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
கிருஷி ஜாக்ரன், facebook பக்கத்தின் மூலம் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் "Farmer the Brand" நிகழ்ச்சியில் வேளாண் விளைப்பொருட்களைச் சந்தைப்படுத்தி வரும் விவசாயிகளுக்கு, தங்களின் தரமான விளைப்பொருட்கள் குறித்து மக்களிடம் தெரியப்படுத்தவும், இதன் மூலம் தங்களின் வியாபாரங்களை விரிவாக்கம் செய்யவும், பிரபலப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் நீங்கள் பங்குபெற வேண்டுமா? - Register here
நீங்கள் ஒரு விவசாயியாக இருப்பின், நீங்கள் உங்களின் விளை பொருட்களைச் சந்தைப்படுத்தி இருப்பின், உங்களை ஊக்கப்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இதற்கான தகுதிகள் ஏதும் இல்லை. வேளாண் பொருட்களை திறம்படச் சந்தைப்படுத்த நினைக்கும் யார் வேண்டும் என்றாலும் இதில் பங்கேற்கலாம்.
Click to register : உங்களைப் பதிவு செய்துகொள்ளுங்கள்
FTB-யின் மாதாந்திர நிகழ்ச்சி - Mahotsav 2020
Farmer the Brand நிகழ்ச்சியின் வெற்றி கொண்டாட்டமாக மாதாந்திர திருவிழா (Monthly Mahotsav 2020) வரும் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் விவசாயிகள் தங்களின் வேளாண் விளை பொருட்களை எப்படி சந்தைப்படுத்தி வருகின்றனர். அதில் என்ன என்ன யுத்திகளைக் கையாளுகின்றனர். தங்களின் விளை பொருட்களின் தரம் உள்ளிட்டவற்றை விரிவாக விளக்குகின்றனர். இதன் மூலம் மற்ற விவசாயிகளுக்கும் தங்களின் விளை பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது குறித்து அறிய ஒரு வாய்ப்பாக இருக்கும்
இந்த நிகழ்ச்சியில் தேசிய அளவில் விருதுகளைப் பெற்றுள்ள விவசாயிகள் 10 பேர் கலந்துகொண்டு வேளாண் விளை பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான யுக்திகளை வழங்குகின்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள்
-
பாரத் பூஷன் தியாகி - பத்மஸ்ரீ விருது பெற்றவர் 2019
-
மஞ்சுலா மற்றும் பார்த்திபன் - தேசிய ஊட்டச்சத்து விருது 2018 -
-
கன்வால் சிங் சவுகான் - பதம் ஸ்ரீ விருது பெற்றவர் 2019 -
-
நவநாத் மல்ஹாரி காஸ்பேட் - கிருஷி பூஷண் விருது பெற்றவர் -
-
தேவேஷ் படேல் - ஆர்கானிக் இந்தியா த்ரிமித்ரா விருது 2018
-
அஜிங்க்யா ஹங்கே - அரசாங்கத்தின் சிறந்த உழவர் விருது. of மகாராஷ்டிரா 2018
-
அவினாஷ் சிங் டங்கி - ஆர்கானிக் இந்தியா ஹலதர்- இந்தியாவில் முதல் 10 இடங்கள் -