மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 June, 2020 9:07 PM IST

தேன் அன்று முதல் இன்று வரை, ஆரோக்கியம் முதல் அழகு வரை அனைத்தையும் அள்ளித்தரும் அட்சயப்பாத்திரமாக விளங்கி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக, சிறுகுழந்தை முதல் வயதானவர்கள் வரை எல்லா தரப்பினரும் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டியதும் தேன்தான். பல நோய்களுக்கு தீர்வு காணவும், உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களை (Micro-Nutrients) அளிக்கவும் தேன் மிகவும் உதவுகிறது

இத்தகைய நன்மை வாய்ந்த தேன் தயாரிப்பையே தங்களின் தொழிலாக கொண்டு அதில் பல மதிப்பு கூட்டு பொருட்களை தயாரித்து அசத்தி வருகின்றனர் ஈரோடு தம்பதியினர்.

மஞ்சரி தேன் - (Manjari Honey)

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கொளப்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ''மஞ்சுளா & பார்த்திபன்'' தம்பதியினர், கிருஷி ஜாக்ரன் தமிழ்நாடு இணையதள ஃபேஸ்புக் பக்கத்தின் மூலமாக நடைபெற்ற ''Farmer the Brand'' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களின் தேன் சார்ந்த மதிப்புகூட்டு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான மஞ்சரி தேன் (Manjari honey) குறித்து விரிவாக பேசினர். வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

அப்போது, கடந்த 10 ஆண்டுகளாக தேனீ வளர்ப்பு மற்றும் தேன் சார்ந்த மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

தேசிய தேனீ வாரியத்தின் மூலம் கோவை வேளாண் பல்கலைக்கழத்தில் நடைப்பெற்ற பயிற்சி முகாமில் முறையாக கலந்துகொண்டு அதற்கான சான்றிதழை பெற்றுள்ளதாக குறிப்பிடும் மஞ்சுளா, மேலும் வேளாண் அறிவியல் நிலையத்தில் (Krishi vigyan kendra) பெற்றுகொண்ட பல்வேறு பயிற்சிகளினால் தேனீ வளர்ப்பில் பல்வேறு தொழில்நுட்பங்களை புகுத்தி தேன் சார்ந்த மதிப்புக்கூட்டு பொருட்களை திறம்பட தயாரித்து பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருவதாக கூறினர்.

அரசு போக்குவரத்து நடத்துனரான தமது கணவர் பார்த்திபனின் முழு ஒத்துழைப்பும், ஊக்குவிப்பும் இருப்பதால், தம்மால் இந்த நிறுவனத்தை சிறப்பாக நடத்திவர முடிவதாக மஞ்சுளா தெரிவித்தார். 

மதிப்பு கூட்டு பொருட்கள் (Value Added Products)

வேம்பு தேன் (Neem honey), கொசு தேன் (Stingless bess Honey), முருங்கை தேன்(Drumsticks honey), பூண்டு தேன் (Garlic Honey), நெல்லி தேன் (Honey amla), பன்னீர் ரோஸ் தேன் (Paneer rose Honey) உள்ளிட்ட பல வகைகளின் தேன் விற்கப்படுகிறது

மேலும் தேனை மதிப்பு கூட்டு பொருட்களாக தேன் அல்வா (Honey halwa)
தேன் கேக் (Honey cake), தேன் திணை பிஸ்கட் (Honey Bisket), தேன் ஜெல்லி (Honey jelly), தேன் ஜஸ்க்ரீம் (Honey ice cream) தேன் கிரேப் ஜூஸ் (honey grapes juice), தேன் ஜாம் (honey jam) தேன் லாலி பாப் (honey lollypop) போன்ற 32 வகையான தேன் மற்றும் தேன் சார்ந்த பொருட்கள் தாயர் செய்து விற்பனை செய்து வருவதாக பார்த்திபன் குறிப்பிட்டார். 

மக்களின் நம்பிக்கை

தேன் அடையுடன் இருக்கும் தேன் - ஒரு கிலோ ரூ.1000க்கும், சுத்தமான தேன் ஒரு கிலோ ரூ.550க்கும், வேம்பு தேன் ரூ.1200க்கும், முருங்கை தேன் ரூ.800, கொசு தேன் - ரூ.780 க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் 

தேன் அல்வா ரூ.450, தேன் ஜெல்லி ரூ.450, தேன் கேக் ரூ.1100 போன்ற விலைகளில் விற்கப்படுவதாகவும், தேன் வகைகள் அனைத்தும் பொதுமக்களின் வசதிக்கேற்ப 500 கிராம், 250 கிராம், 150 கிராம் பாட்டில்களில் விற்கப்படுவதாக குறிப்பிட்டனர்.

இதில் குறிப்பாக தேன் கேக், சாதாரன சர்கரை மைதா பதப்படுத்தப்பட்ட பொருட்கள் என எந்த ஒரு கலப்படமும் இல்லாமல் முழு கோதுமையில் அரைத்த மாவு, வெண்ணெய், தேன், பாதாம், முந்திரி போன்ற உலர் பழங்களை பயன்படுத்தி மட்டுமே செய்யப்படுவதாகவும், இதில் அதிக சத்துக்கள் இருப்பதால் இதனை பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்குவதாக கூறினர்.

மேலும், தேன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதில் அதிக கவனம் தேவை என்று குறிப்பிட்ட தம்பதியினர், வெறும் பாட்டில்களை கொண்டு விற்பனை செய்தால் அதில் அதிக நம்பகத்தன்மை இருக்காது என்றும் இதன் காரணமாகவே, மஞ்சரி தேன் என்ற "பிரான்ட்" (Brand) மூலம் விற்பனை செய்வதாக குறிப்பிட்டனர்.  

முறையான பேக்கிங் செய்து அதனை பாதுகாப்பான முறையில் விற்பனை செய்வதால் பொதுமக்கள் தங்களின் பொருட்களை அதிகம் விரும்புவதாக குறிப்பிடுகின்றனர். 

அனைவருக்கும் ஏற்றது

இந்த தேன் பொருட்களைச் சர்க்கரை நோயாளிகள் எனப்படும் நீரழிவு நோயாளிகள் கூட உண்ணலாம். ஏனெனில், தேன் சேர்ப்பதால் இவை அனைத்திலும் சுக்ரோஸின் (Sucrose) அளவு மிகக் குறைவாகவே இருப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருப்பதாகவும் இதனால், இன்சுலின் அளவு கட்டுக்குள் இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி

சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி அளித்து , தொழில் தொடங்க ஏற்பாடு செய்து தருவதாகவும் பார்த்திபன் தெரிவித்தா். அவ்வாறு தேனீ வளர்க்க விரும்புபவர்கள், 6 ஆயிரம் ரூபாய் செலவு செய்து அதற்கான தேனீ பெட்டிகளை வாங்கி மரங்களில் நிழலில் பொருத்திவிட்டு மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே பராமரிப்பு செய்தால் ஆண்டிற்கு ஒரு பெட்டிக்கு 10 கிலோ வரை தேன் உற்பத்தி செய்ய முடியும் என்று பார்த்திபன் தெரிவித்தார். இந்த தேன் பல ஆண்டுகளுக்கு கெடாது எனவும், தேனை உணவுடன் சேர்த்துக்கொள்வதை வழக்கமாக்கிக்கொண்டால் பல நோய்களில் இருந்து விடுபடலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தேனீக்கள் கடிக்காது

இதனிடையே, வாசகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த பார்த்திபன், தேனீக்கள் பெரும்பாலும் கடிக்காது என்றும், தேனீக்களின் இனப்பெருக்கத்திற்குத் தடையாக இருந்தாலோ அவற்றுக்குச் சாதகமான வெப்பநிலை குறைந்தாலோ மட்டுமே கடிக்கக்கூடிய சூழல் உருவாகும் என்று கூறினார். நாம் பொறுமையாக கையாளும் வரை எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்த அவர் தேனீக்கள் கடித்தால் அந்த இடத்தில் பச்சையிலைச்சாறு பிழிந்தால் குணமாகிவிடும் என்றார். மேலும், மலைத்தேனீ அல்லது காட்டுத் தேனீக்கள் கடித்தால் உடனடியாக மருத்துவமனை சென்று தடுப்பூசி போட்டால் குணமடைந்துவிடுவோம் என்றும் கூறினார்.

மேலும் தேனீ வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், வீட்டின் மாடியில் கூட எளிதில் தேனீக்களை வளர்க்க முடியும் என்று தேனீ வளர்ப்பாளர்களை ஊக்குவிக்குகிறார் பார்த்திபன்.

மகசூல் அதிகரிக்கும்

பொதுவாக விவசாய நிலங்களில் தேனீக்களை வளர்ப்பதால் அதிக மகசூல் கிடைப்பதுடன் அங்கு விளையும் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

உடல் எடையைக் குறைக்க உதவும்

எந்த பொருளுடன் சேர்க்கப்படுகிறதோ, அதன் தன்மையை அப்படியே ஏற்கும் தன்மை கொண்டது தான் தேன். எனவே, காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில், எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து பருகுவது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. அதிலும் சுத்தமான தரமான தேன் நல்ல பலனைத்தருகிறது என்றும், அதனை வாங்கி பயன்படுத்த அனைவரும் முன்வரவேண்டும் எனவும் பார்த்திபன் கேட்டுக்கொண்டார்.

தேனீக்கள் வளர்ப்பு மற்றும் தேன் தயாரிப்பிற்காக மஞ்சுளா- பார்த்திபன் தம்பதியினர், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Elavarase Sivakumar
Krishi jagran

மேலும் படிக்க...

கலப்பினம் இல்லாத பாரம்பரிய நெல் ரகங்கள்! - இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ''சாந்திகுமார்''!

ஒசூர் முதல் துபாய் வரை 'ரோஜா' ஏற்றுமதி - மலர் சாகுபடியில் அசத்தும் பட்டதாரி பாலசிவபிராசத்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறுதானியங்கள்!!

English Summary: National nutrition award winner Manjula Parthiban explained about Earn more by Honey Bee Keeping
Published on: 28 June 2020, 05:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now