மாடி தோட்டத்தில் நெல் சாகுபடி
வீட்டு மாடி தோட்டத்தில் காய்கறி கீரைகள் வளர்ப்பு பற்றி கேள்விபட்டு இருப்பீர்கள். நெல் சாகுபடி செய்வது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
திருவனந்தபுரத்தில் வாழும் திரு. ரவீந்திரன் இதையே செய்து சாதித்து உள்ளார். அவரின் சாதாரண வீட்டில் வீட்டு தோட்டம் மட்டுமன்றி மாடியிலேயே நெல் வளர்க்கிறார்.
இதற்கு 300 சதுர அடி மாடி பயன்படுத்தி உள்ளார். மாடியில் உள்ள தொட்டிகள் அதிக பாரம் இருக்காமல் இருக்கவும், நீர் சேராமல் இருக்கவும் மாடியில் இருந்து கம்பிகள் மூலம் சப்போர்ட் கொடுத்து உள்ளார்.
150 மண் சட்டிகளில் நெல் பயிர் வளர்க்கிறார். அவருக்கு இதன் மூலம் 32 கிலோ கிடைக்கிறது. வருடம் 3 தடவை சாகுபடி செய்கின்றார். அதிகம் நீர் தேவை இல்லை என்கிறார் இவர். வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே நீர் விடுகிறார். நீர் ஆவி ஆகாமல் இருக்க அசோலா பயன்படுத்துகிறார். இவர் சாகுபடி செய்துள்ள ரகங்கள் – பிரதியுஷா மற்றும் உமா
இவர் அரசாங்கத்திடம் இருந்தும் பல தனியார் நிறுவனங்களிடமிருந்தும் மாடித் தோட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.