மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 July, 2021 2:33 PM IST
Sasikumar, Trichy, musiri

வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க போகும் வெற்றி கதையில் நாம் வாசிக்க போகும் கட்டுரை தமிழக்தின் PADMAN பற்றியது தான்.திரையுலகத்தில் ஹிந்தி படத்தில் அக்ஷய்குமார் PADMAN படத்தில் நடித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு முயற்சியை எடுத்தார். அதே போல் தமிழகத்திலும் ஒரு விழிப்புணர்வும் ஏற்படுத்தும் வகையில் மூலிகை நாப்கின் தயாரித்து வருகிறார். வாருங்கள் பார்க்கலாம்.

இவர் பெயர் சசிகுமார்,இவர் திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்தில்  ஸ்ரீ ஹெர்பல் நாப்கின் ஸ்ரீ மூலிகை நாப்கின்  என்ற பெயரில்  கடந்த மூன்று வருடமாக  இயற்கை முறையில்  மூலிகை நாப்கின்  தயாரித்து வருகிறார்.  மூலிகை நாப்கின்  எந்த ஒரு  ரசாயன பொருட்கள்  மற்றும்  பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்குகள்  பயன்படுத்தாமல்  வீட்டு முறையில்  தையல் மிஷின் மட்டும் பயன்படுத்தி  மகளிர் குழு பெண்களின் உதவியுடன்  தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர் தயாரிக்கும் மூலிகை நாப்கின் இல்  வேம்பு துளசி  சோற்றுக்கற்றாழை  ஆகியவற்றை நிழலில் உலர்த்தி குறைந்த வெப்பநிலையில் பொடி செய்து பயன்படுத்தி வருகிறார். மேலும் அதிகம் பிளீச்சிங் செய்யப்படாத  காட்டன்களைக் கொண்டு தயாரித்து வருகிறார்.

இவர்கள் பயன்படுத்தக்கூடிய  பொருள்களின் தன்மைகள்

வேம்பு  வேப்பிலை பொடி நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது . கிருமி நாசினியாக பயன்படுத்தக்கூடியது . உடல்களில் நோயை வரவிடாமல் தடுக்கும் வல்லமை கொண்டது . கர்ப்பப்பையில் அல்லது  உடலிலோ புண்கள் இருந்தால் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது . துளசி பொடி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். புண்களை ஆற்றும்.

சோற்றுக்கற்றாழை பொடி  உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும் . புண்களை ஆற்றும் . இவை கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் குறைக்கும் படிப்படியாக நோயை குணமாக்கும் சக்தி கொண்டது. எனவே தான் இந்த பொடியை பயன்படுத்தி நாப்கின் தயாரித்து பெண்களின் உடலிலுள்ள அனைத்து விதமான நோய்களையும்  சரி செய்ய  பயன்படுத்திகிறார்கள். பெண்களுக்கு ஏற்படும் 98% ஆன நோய்களுக்கு காரணம் அவர்கள் பயன்படுத்தும் ரசாயனம் கலந்த நாப்கின்களும், அதை பயன்படுத்தும் முறை தெரியாமல் பயன்படுத்துவதும் தான் ஆகும். பாரம்பரிய முறையில் நம் முன்னோர்கள்  பருத்தித் துணியால் ஆன வேஷ்டி துண்டுகளை பயன்படுத்தினர் . அந்த கால கட்டங்களில் கர்ப்பப்பை சம்பந்தமான எந்த விதமான ஒரு நோய்களும் மக்களுக்கு வந்தது கிடையாது . மேலும் குழந்தையின்மை பிரச்சனையும் கிடையாது. பெண்கள் எப்போது ரசாயனம் கலந்த நாப்கின்களை பயன்படுத்த ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்துதான் கர்ப்பப்பை சம்பந்தமான நோய்களும் குழந்தையின்மை பிரச்சினைகளும் அதிகரித்து வருவது நமக்கு தெரிந்த ஒன்றே.

எனவே முடிந்த அளவு நம்முடைய குடும்பத்திற்கும் நம்மை சார்ந்துள்ள மக்களுக்கும் மூலிகை ரசாயனம் கலக்காத நாப்கின்கள் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. பெண்களைக் காப்போம் ஆரோக்கியமான உலகத்தை படைப்போம் என்ற சிந்தனையுடன் சசிகுமார் அவர்கள் இந்த தொழிலை துவங்கினர்.

மூலிகை நாப்கின் தொழில் எப்படி துவங்கலாம்:

மூலிகை நாப்கின் தொழில் துவங்க குறைந்தபட்ச  தொகை ரூபாய் 10000 இருந்தாலே இந்த தொழிலை செய்யலாம் . இந்த தொழிலை செய்வதற்கு  ஒரே ஒரு தையல் மெஷின் மட்டுமே இருந்தால் போதும் . ஆனால் இந்தத் தொழிலைப் பற்றிய  அனுபவம் சிறிதாவது வேண்டும். இதை தயாரிப்பது எளிது ஆனால் மக்களிடையே கொண்டு சேர்ப்பது தான் சிக்கலாக இருக்கும்.

முதலாவதாக மற்ற ரசாயனம் கலந்த நாப்கின்களின் விலையை விட இதன் விலை சற்று அதிகம், மற்றொன்று இதை தயாரிப்பது ஒரு நாளில் குறைந்தபட்சம் இரண்டு பேர் சேர்ந்து செய்தால் 20 பாக்கெட் வரை மட்டுமே தறிக்க முடியும். அப்போது நமக்கு கட்டிடத்தின் வாடகை கரண்ட் பில், கூலி  போன்றவை மிக குறைவானதாகவே கிடைக்கும் . தொடர்ந்து ஆர்டர்கள் வந்து கொண்டிருந்தாள்  சுலபமாக இருக்கும் . இதை மக்களிடையே கொண்டு சேர்க்கும்  முயற்சியில் கொஞ்சம் அனுபவம் தேவை. அதாவது மக்களிடையே  கெமிக்கல் கலந்த நாப்கின்களுக்கும் மூலிகை நாப்கின்களுக்கும்  இடையே உள்ள வேறுபாடுகளை தெளிவாக விளக்க வேண்டும்.

உடலின் மேல் அக்கறை கொண்டவர்கள் .ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நாப்கின்களை தேடி வாங்கிக் கொள்வார்கள் . நாங்கள் மூலிகை நாப்கின்களை  விற்பனை செய்வதற்கு முன் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி மெதுவாக மக்களை  பயன்படுத்த பழகி வருகிறோம் இன்று வரை. வருமானம் குறைவாக இருந்தாலும் இதை அனைத்து பெண்களும் பயன்படுத்தும் வகையில் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து பாடுபட்டு கொண்டிருக்கிறோம் . நோயில்லா சமுதாயத்தை படைக்க இதுவும் ஒரு வழி தான் என்று சசிகுமார் மிகவும் முற்போக்கு சிந்தைகளைக் கொண்டவர். மேலும் நமது விவசாய நண்பர்கள் மூலிகை நாப்கின் தொழிலை தொடங்க விரும்பினால்,சசிகுமார் அவர்கள் பயிற்சி அளிக்கவும் தயாராக உள்ளார்.அவர்களை தொடர்புகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பாருங்கள்.நன்றி!

தொடர்புக்கு:

R.சசிகுமார் 

 ஸ்ரீ மூலிகை நாப்கின்

 9677355050

மேலும் படிக்க:

கத்தரிக்காய் நாற்று உற்பத்தியில் புதுமை! - "குழித்தட்டு நாற்றங்கால் வளர்ப்பு"

உபரி வருமானத்திற்கும், உடல் நலத்திற்கும் இயற்கை விவசாயமே உகந்தது!

பால் விற்று ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி!

English Summary: PADMAN Of Tamil Nadu Sasikumar: Shri Herbal Napkin !!
Published on: 19 July 2021, 02:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now