முற்போக்கு விவசாயி யோகேஷ் பூதாடா மஹிந்திரா டிராக்டர்ஸ் மூலம் தனது பால் வியாபாரத்தை அதிகப்படுத்தியுள்ளார். 2019 ஆம் ஆண்டில் 8 மாடுகளுடன் தொடங்கியவர், தற்போது 100 மாடுகளுக்கு மேல் பாரமரித்து வருகிறார். ஆண்டிற்கு 1.5 கோடி வருவாய் ஈட்டி மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்.
பன்வெல்லில் வசித்து வருகிறார் யோகேஷ் பூதாடா. அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ள அவரது வெற்றிக்கு அடிப்படை காரணியாக விளங்குவது அவரது அயராத உழைப்பும், அவரது நம்பிக்கைக்குரிய தோழனாக கருதப்படும் மஹிந்திரா டிராக்டரும் என்றால் மிகையல்ல.
கால்நடை பண்ணையில் சவால்கள்:
நாட்டு மாடுகள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை உணர்ந்த யோகேஷ், மாட்டு பண்ணையினை நிறுவி கால்நடை விவசாயியாக களத்தில் இறங்கினார். அவரது தொடக்க காலம் அவ்வளவு எளிதாக இல்லை. பசுக்களைப் பராமரித்தல், தீவனம் வழங்குதல் மற்றும் சந்தைக்கு பொருட்களை வழங்குதல் என எல்லாவற்றிலும் சவால்கள் வந்துக் கொண்டே இருந்தது. ஆனால் யோகேஷின் எண்ணமும் செயல்பாடுகளும் தெளிவாகவும், ஒவ்வொரு முடிவும் உறுதியாகவும் இருந்தது.
மஹிந்திரா டிராக்டர்கள்: ஒரு உண்மையான துணை
கால்நடை பண்ணையுடன் , யோகேஷ் தனது மாடுகளின் தீவனத்திற்காக நிலத்தையும் பயிரிட வேண்டியிருந்தது. 2019 ஆம் ஆண்டில், அவர் மஹிந்திரா 575 DI XP பிளஸ் டிராக்டரை வாங்கினார். இது அவரது விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் பல்வேறு மாற்றாங்களை ஏற்படுத்தியது. இதுக்குறித்து யோகேஷ் கூறுகையில், "மகேந்திரா டிராக்டர் எங்கள் வேலையை மிகவும் எளிதாக்கியுள்ளது. இது நேரத்தையும் செலவுகளையும் மிச்சப்படுத்துகிறது."
மஹிந்திரா டிராக்டரின் சக்தி மற்றும் செயல்திறன் கடினமான விவசாய பணிகளையும் எளிதாக்கியது. உழுதல், விதைத்தல் மற்றும் அறுவடை செய்தல் போன்ற பணிகள் சரியான நேரத்தில் துல்லியமாக முடிக்கப்படுகின்றன.
டிராக்டர் ஒரு விவசாய பங்காளியாக மாறியது மட்டுமல்லாமல், அவரது முழு கால்நடை வளர்ப்பு பணிகளையும் நெறிப்படுத்தியுள்ளது.
மில்லினியர் விவசாயி விருது:
மஹிந்திரா டிராக்டர்ஸ் உதவியுடன், யோகேஷ் தனது நிலத்தை முழுமையாகப் பயன்படுத்தினார். அவர் தனது பண்ணையில் பயிரிட்ட தீவனப்புல் வகைகள் அவரது பசுக்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தி, பாலின் தரத்தை உயர்த்தியது. படிப்படியாக, அவர் நெய், தயிர் மற்றும் பிற பொருட்களையும் தயாரிக்கத் தொடங்கினார். அவரது கடின உழைப்பு மற்றும் அவரது தயாரிப்புகளின் தரம் உள்ளூர் மற்றும் பெரிய சந்தைகளில் அவருக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. 4-5 ஆண்டுகளில், அவரது வருவாய் கணிசமாக அதிகரித்தது. அவரது செயல்பாடுகள் அவருக்கு "மில்லினியர் விவசாயி" விருதைப் பெற்றுத் தந்தது.
எதிர்க்காலத் திட்டம்:
யோகேஷ் கூறுகையில், "மகேந்திரா டிராக்டர் எனது பயணத்திற்கு ஒரு புதிய திசையை கொடுத்தது. இது வெறும் இயந்திரம் அல்ல, எனது வெற்றியின் முக்கிய பகுதி. மில்லினியர் விவசாயி விருது போன்ற அங்கீகாரம் என்னை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது” என்றார். இப்போது, தனது பண்ணையை விரிவுபடுத்தவும், மற்ற விவசாயிகளுக்கு தனது அனுபவங்களை பகிரவும் திட்டமிட்டுள்ளார்.
சரியான கருவிகள் மற்றும் கடின உழைப்பு இருந்தால், எந்த கனவையும் நனவாக்க முடியும் என்பதற்கு யோகேஷின் கதை ஒரு எடுத்துக்காட்டு. "மஹிந்திரா டிராக்டர்கள் போன்ற கூட்டாளர்களுடன், ஒவ்வொரு விவசாயியும் தங்கள் இலக்குகளை அடைய முடியும்," என யோகேஷ் தெரிவித்துள்ளார்.
மஹிந்திரா 575 DI XP Plus யோகேஷின் வெற்றிப் பயணத்தின் ஒரு அங்கமாக இருந்து வருவதோடு, அவரது பணிகளின் ஒவ்வொரு நகர்விலும் உற்ற தோழனாக விளங்குகிறது என்றால் மிகையல்ல.
Read more:
நெற்பயிருக்கான உரம் டூ கால்நடை தீவனம்: அசோலாவின் தன்மை என்ன?
cattle feed Azolla: அசோலா வளர்ப்புக்கு ஏற்ற சூழ்நிலைகள் என்ன?