Success stories

Tuesday, 14 May 2019 10:25 AM

சாதித்து காட்ட வேண்டும் என்ற என்னம் இருந்தால், மனிதனால்  எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். இப்படி கேரளத்தில் வசிக்கும் 53 வயதான பெண் சுமா மஞ்சுல் செய்து காட்டி இருக்கிறார். தனது வீட்டு தோட்டத்தில் வளர்த்த தாவரங்களை விற்று அதன் மூலமாக ஏழை மக்கள் சிகிச்சை பெற செய்து அவர்களுக்கு புது வாழ்வு அளித்திருக்கிறார். அதிகரித்து வரும் இந்த மாசு பிரச்சனையால் சுவாச கோளாறு அதிகரித்து விடும் என்று சுமா அளித்த ஒரு பேட்டியில் கூறியிருந்தார். கொச்சி மெட்ரோ கட்டுமானப் பணி தங்கள் நகரத்தில் நிறுத்தப்பட்டபோது சுற்றியுள்ள பகுதியில் மக்களுக்கு சுவாச கோளாறு அதிகளவில் ஏற்பட்டது.  இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அவர் தங்கள் அக்கம் பக்கத்து வீடுகளில் மினி கார்டன் ஒன்று அமைத்துக் கொடுத்தார்.

சுமா அவர்களும் தங்களது வீட்டில் ஒரு மினி கார்டன் அமைத்திருந்தார். இதில் பிளாஸ்டிக் பொருட்களை விட மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள், தொட்டிகளை அதிகம் பயன் படுத்துகிறார். 2019ஜனவரியில் இவர் இந்த பணியை தொடங்கினார், இதனால் இவருக்கு அதிக புகழும் சேர்ந்தது. அதிக அளவில் ஏழைகளுக்கு சிகிச்சை பெற உதவியிருக்கிறார். மேலும் தனது வீட்டில் வளர்த்த தாவரங்களை விற்பனை செய்து  அதில் கிடைக்கும் பணத்தைக்கொண்டு ஏழை மக்களின் சிகிச்சைக்கு பயன் படுத்துகிறார்.

சுமாவின் தந்தையார் கடந்த ஒன்றரை வருடமாக நியாபக மறதி பிரச்சனையால் அவஸ்த்தை பட்டு கொண்டிருந்தார், மேலும் இதன் காரணமாக  2018 டிசம்பர் இல் அவர் காலமானார். பின்பு சிறிது நாட்கள் கழித்து அவரது தாயும் காலமாகிவிட்டார். சுமாவின் வாழ்க்கையில் மோசமான வருடமாக அமைந்தது, காரணம் போதுமான பண வசதி இல்லாத காரணத்தால் தனது தாய் தந்தைக்கு முறையான சிகிச்சைக்கு அளிக்க முடியவில்லை. இந்த காரணத்தால் சுமா ஏழை மக்களுக்கு உதவ நினைத்தார், மற்றும் சாதித்தும் காட்டியுள்ளார்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)