சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 16 October, 2018 2:15 PM IST

இளைஞர்களுக்கு விவசாயம் மீது ஆர்வம் அதிகரித்து வருவதை  எடுத்துக்காட்டுகிறார். உத்திரப்பிரதேசம் லஹிம்பூர் மாவட்ட விவசாயி அச்சல் மிஷ்ரா.

  நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தையும் கடைப்பிடித்து அச்சல் கரும்பு பயிரை வெற்றிகரமாக சாகுபடி செய்துள்ளார்.  அவர் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பல விருதுகள் பெற்றுள்ளார்.  இந்த வருடமும் இவர் விருது பெற்றுள்ளார்.

 மாவட்ட அளவில் அதிக கரும்பு மகசூலை அறுவடை  செய்த வகையில் இவருக்கு முதல்பரிசு வழங்கப்பட்டுள்ளது.  கரும்பு சாகுபடி பற்றிய எல்லா தகவல்களையும் லக்னோவில் உள்ள இந்திய கரும்பு ஆராய்ச்சி நிலையத்திலிருந்தும்,கோயமுத்தூரில் உள்ள கரும்பு இனப்பெருக்க நிறுவனத்திலிருந்தும் இவர் பெற்றுள்ளார்.

இவர் லக்னோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.  2005 ஆம் ஆண்டு முதல் இவர் விவசாயம் செய்துவருகிறார்.  2007-08 ஆம் ஆண்டில் உத்திரப்பிரதேச மாநில அளவில்  அதிக கரும்பு மகசூலை அறுவடை செய்து முதல் பரிசு பெறுள்ளார்.  இந்த ஆண்டிலும் இவர் கோ. 0238 ரக கரும்பை பயிரிட்டு 329.60 டன்/எக்டர் என்ற அளவில் மகசூல் எடுத்துள்ளார்.  இவரது கரும்பு பயிர் 18.50 அடி உயரமும் அதிக எடையும் கொண்டிருந்தது.  மிருகக்கழிவுகள் பண்ணைக் கழிவுகள் இரசாயன உரங்கள் மூலம் இவர் இந்த அதிக மகசூலை பெற்றுள்ளார்.  இவர் மிகக் குறைந்த அளவு பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்தி உள்ளார்.  மறுதாம்பு கரும்பு பயிருக்கு இவர் மக்கின கரும்பு தோகைகளை உரமாக பயன்படுத்துகிறார்.

English Summary: Successful Sugarcane Cultivation
Published on: 16 October 2018, 02:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now