ஹர்ப்ரீத் சிங், உத்திர பிரதேச மாநிலம், பிலிபிட் மாவட்ட இளம் விவசாயி. வெற்றிகரமான கரும்பு சாகுபடிக்கு இவர் நல்லதொரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். இவர், தனது தந்தையிடமிருந்து விவசாயம் செய்வதற்கான உந்துதலைப் பெற்றார். மேலும் அவரது தந்தையிடமிருந்து கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்களை கற்றுக் கொண்டார். கரும்பு சாகுபடியை பெரிய அளவில் செய்யத் தொடங்கினார். விஞ்ஞானிகளின் அறிவுரைகளை சரிவரக் கடைபிடித்து கரும்பு சாகுபடியில் அதிக இலாபம் அடைந்ததோடல்லாமல் கரும்பு சாகுபடியில் வல்லுநராகவும் ஆகிவிட்டார்.
கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்களை மிகச்சிறப்பாக செயல் படுத்தியதோடல்லாமல், அவரது மேலாண்மைத் திறமைகளையும் கரும்பு சாகுபடியில் பயன்படுத்தியுள்ளார். அதன் பயனாக கரும்பு சாகுபடியை சிறப்பாகச் செய்து வெற்றி பெற்றுள்ளார்.
கரும்பு விதைக் கரணைகளை ஹர்ப்ரீத் சிங், புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியுள்ளார். மற்ற விவசாயிகளைப் போல் இவர் முழுக் கரும்பை விதைக்கரணையாகப் பயன்படுத்தாமல், ஒரு பருவிதைக் கரணைகளைப் பயன்படுத்தினார். அதன் பயனாக விதைக்கரணைகள் அளவு கணிசமாக குறைந்து விட்டது, சேமிப்பு அதிகரித்து விட்டது.
மற்ற கரும்பு விவசாயிகள் ஏக்கருக்கு 30 - 35 குவிண்டால் விதைக்கரணைகளை பயன்படுத்தியபோது ஹர்ப்ரீத் சிங் 15 - 20 குவிண்டால் விதைக்கரணைகளை மட்டுமே பயன்படுத்தினார்.
நவீன வேளாண் தொழில் நுட்பங்கள், இரசாயனங்கள் பயன்பாடு கரிம எருக்கலான சாணம் மற்றும் தாவரக் கழிவுகள் பயன்பாடு ஆகியவைகளை முறைப்படி கடைபிடித்து கரும்பு சாகுபடியை ஹர்ப்ரீத் வெற்றிகரமாக செய்து வருகிறார். அவரைப்போன்று, நவீன முறையில் விவசாயம் செய்வதற்கு மற்ற விவசாயிகளை ஹர்ப்ரீத் ஊக்கப்படுத்தி வருகிறார்.