சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 5 September, 2019 3:22 PM IST

பனங்கிழங்கிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் செய்து  அசத்தி வரும் தமிழாசிரியர்.

நாகை மாவட்டம் ஆயக்காரன் புலத்தை சேர்ந்த கார்த்திகேயன் தனியார் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது பனங்கிழங்கை கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் செய்து அசத்தி வருகிறார். இதில் குறிப்பாக ஆயக்காரன்புலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கார்த்திகேயனின் பனங்கிழங்கு அல்வா விருந்து நிகழ்ச்சிகளில் ஸ்பெசல் ஸ்வீட்டாக பரிமாறப்படுகிறது.

இது குறித்து அவர் கூறியது:

நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் லட்சக்கணக்கான மரங்கள் அழிந்தன. ஆனால் பனை மரங்கள் மட்டும் ஒன்று கூட சாயவில்லை. ஏன் என்றால் பனை மரத்தின் சல்லி வேர்கள் அத்தனை வலிமையானவை. இது குறித்து பொது மக்களிடையே பனை மரத்தை பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்துவது என் நோக்கம் என்றார்.

கடந்த ஆண்டு பனங்கிழங்கு பர்பி செய்தேன் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது பனங்கிழங்கு அல்வா செய்துள்ளேன் இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் அடுத்து பனங்கிழங்கு அதிரசம், இனிப்பு முறுக்கு, கார முறுக்கு, பணியாரம், கேசரி, தோசை, என 25  மதிப்பு கூட்டப்பட்ட பனங்கிழங்கு உணவுப் பொருட்கள் செய்து சாதனை படைப்பது தான் என் லட்சியம் என்றார்.

பனங்கிழங்கு பயன்கள்

* உடலை வலுவடையச் செய்கிறது.

* உடல் எடையை குறைக்க பனங்கிழங்கு சிறந்தது.

* சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாகும்.

* நல்ல பசியை தூண்டும்.

* உடலில் உள்ள கழிவுகளை நீக்கி உடலை சுத்தமாக வைக்கிறது.

* மலச்சிக்கல் நோயை குணப்படுத்தும்.

* உடல் ஊட்டத்தை அதிகரிக்கிறது.

பனங்கிழங்கு அல்வா செய்முறை

பனங்கிழங்கை நன்றாக வேக வைத்து, பின் அதனை உலர வைக்க வேண்டும். உலர்ந்த பின் அதனை மாவாக்கி, அதில் முந்திரி, ஏலக்காய் சிறிது நெய் சேர்த்து வெல்லப்பாகு கலந்தால் சுவையான பனங்கிழங்கு அல்வா தயார், என்று பனங்கிழங்கு அல்வா செய்முறையை கூறினார். 

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: Tamil Teacher Prepared Varieties of Valued added food items of Palmyra sprouts: Planning more than 25 value added food items
Published on: 05 September 2019, 03:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now