பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 7 September, 2023 12:36 PM IST
The inspiring story of the woman farmer Rama Bisht

எல்லோருக்குள்ளும் ஒரு கதை உண்டு. அந்த கதையில் தவிர்க்க முடியாத சோகங்களும், வலிகளும் நிறைந்திருக்கவும் வாய்ப்புள்ளது. இதனை கடந்து வாழ்வை நகர்த்துபவர்களே இறுதியில் வெற்றியாளர்களாக மாறுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வெற்றியாளர் தான் ராமா பிஷ்ட்.

விவசாயம், மதிப்பு கூட்டு தொழில்நுட்பம், பழம் பதப்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளில் வெற்றிக் கொடிய பெண்மணியின் கதை தான் இது.

1982 ஆம் ஆண்டு பிறந்த ராமா பிஷ்ட் தனது வாழ்க்கையில் பல சவால்களை கடந்து வந்துள்ளார். நைனிடாலில் உள்ள ஓகல்கண்டாவில் வசிக்கும் ராமா, “ஆப்பிள் சோன் ராம்கர்” (Apple Zone Ramgarh) என்ற பழம் பதப்படுத்தும் பிரிவின் உரிமையாளராக உள்ளார். அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட சுய உதவி குழுக்களிடமிருந்து பழங்களை வாங்கி வணிக ரீதியில் அதனை மதிப்புக் கூட்டி விற்பனை செய்து வருகிறார். நூற்றுக்கணக்கான பெண்களுக்கு வேலை வாய்ப்பினையும் வழங்கி வருகிறார்.

இவரது வெற்றி பயணம் துன்பம் மற்றும் போராட்டங்கள் நிறைந்த ஒன்றாக தான் இருந்துள்ளது. 12 வயதில் இயற்கை பேரிடரால் தனது உடமைகளை இழந்துள்ளார். 2002 ஆம் ஆண்டில், உத்தரகாண்டின் காவலர் பணிக்கான போட்டித் தேர்வில் ரமா தேர்ச்சி பெற்றாலும், அவரது தந்தையின் எதிர்ப்பினால் அப்பணியில் சேரவில்லை. மேலும், அவருக்கு உடனடியாக திருமணமும் செய்து வைக்கப்பட்டுள்ளது.

ரமாவிற்கு, அவரது மாமியார் வீட்டிலும் இதே நிலையே நீடித்தது. கடுமையான நிதி நெருக்கடியில் தான் காலத்தை தள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. ”தோல்வியை ஏற்றுக்கொள்ள மனமில்லை, என் விதியே நானே எழுத விரும்பினேன்” என தனது கனவினை முன்னணி நாளிதழ் ஒன்றிடம் விவரித்துள்ளார் ராமா. பழங்களிலிருந்து உணவு பொருட்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது ராமவிற்கு.

உள்ளூரில் பழம் பயிரிடுபவர்களிடமிருந்து சிறிய மற்றும் பழுத்த பழங்களை வாங்கி, அவற்றில் இருந்து ஜாம், சட்னி, ஜூஸ், ஊறுகாய் மற்றும் பிற பொருட்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளார் முதற்கட்டமாக. மேலும் விவசாயம் மற்றும் தோட்டக்கலையில் ஆர்வம் செலுத்தி பணி புரிந்து வந்த நிலையில் பட்டப்படிப்பு பயின்று இளங்கலை பட்டம் பெற்றார்.

தோட்டக்கலையில் ஈடுபட்டிருந்த போது மலையடிவாரத்தில் பல மூலிகைகள் இருப்பதை கவனித்துள்ளார். புதிய தலைமுறை விவசாயிகள் மூலிகை பக்கம் ஆர்வம் காட்டாத நிலையில், தோட்டக்கலை பயிர்களுடன் மூலிகைகளையும் பயிரிட தொடங்கினார். தற்போது, தைம், ஆர்கனோ, ரோஸ்மேரி, எலுமிச்சை புல், எலுமிச்சை தைலம், புதினா, துளசி, ரோஜா ஜெரனியம், கற்றாழை, அஸ்வகந்தா, சர்பகந்தா, வளைகுடா இலை, கிலோய், அர்ஜுனா போன்ற பல வகையான மூலிகைகளை உற்பத்தி செய்து வருகிறார்.

”2002-ல் எங்கள் சொந்த பழங்கள் பதப்படுத்தும் பிரிவை நிறுவியபோது, மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து பழங்களை கொண்டு வந்தார்கள், நாங்கள் அவர்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை தயாரித்தோம். இன்று நாங்கள் ஆப்பிள் மண்டலம் ராம்கர் (Apple Zone Ramgarh)  மூலம் 100-க்கும் மேற்பட்ட வெவ்வேறு தயாரிப்புகளை தயாரித்து வருகிறோம்" ராமா கூறினார்.

இதையும் படிங்க: கேலி கிண்டல் செய்த ஊரே அண்ணாந்து பார்க்க வைத்த பெண் விவசாயி

போராட்ட வாழ்விலிருந்து சாதித்த ராமா, தன் வாழ்நாளில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். அவருக்கு 2019 ஆம் ஆண்டில் தேசிய அளவிலான சரஸ் விருது வழங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டில், மாநிலத்தில் நடந்த வரலாற்று விவசாயத் திருவிழாவில் அவருக்கு உத்தராயணி மேளா விருது வழங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து தேசிய உத்தரகாண்ட் மகாசபாவால், மா நந்த சக்தி சம்மான் 2023 (Maa Nanda Shakti Samman 2023) வழங்கப்பட்டுள்ளது.

விவசாயி, தொழிலதிபர் என பன்முகத் தன்மையுடன் விளங்கும் ராமா பிஷ்ட் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி பலருக்கும் வாழ்வின் உந்துசக்தியாக திகழ்கிறார் என்றால் அது மிகையல்ல.

மேலும் காண்க:

PM kisan அடுத்த தவணை- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கடைசி சான்ஸ்- இலவசமாக ஆதார் அப்டேட் பண்ண இதை செய்யுங்க

English Summary: The inspiring story of the woman farmer Rama Bisht
Published on: 07 September 2023, 12:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now