மத்தியப்பிரதேச மாநிலம் சிண்ட்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த ரேவான்ந்த் நிகாஜு தோட்டப்பயிர்கள் மூலம் தொடர்ந்து சிறந்த வருவாயை ஈட்டுகிறார். தக்காளி சாகுபடியில் நல்ல விளைச்சலும் அதிக லாபமும் கிடைப்பதால் கடந்த ஐந்து ஆண்டுகளாக தக்காளியையே பயிரிடுகிறார் ரேவான்ந்த்.
விஞ்ஞானிகளிடம் இருந்து கிடைத்த தகவல்களும் அறிவுறுத்தல்களும் சாகுபடிக்கு உதவியாக இருப்பதாக கூறும் அவர் இதனால் ஆறே மாதத்தில் இரண்டு ஏக்கரில் பயிரிட்ட தக்காளி மூன்று லட்சரூபாய் நிகர லாபம் ஈட்டித்தந்ததாக சொல்கிறார். சிறந்த பயிர் மேலாண்மை மற்றும் தொழில் நுட்பத்தால் மேற்கொள்கின்றனர். இரண்டு ஏக்கர் நிலத்தில் தட்டுகளில் தக்காளிகளை பயிரிட்டு குறுகிய காலத்தில், குறைவான செலவில் நல்ல மகசூலை பெறுகின்றனர். இரண்டு ஏக்கரில் 200 தட்டுகளில் 105 துளைகளில் அவர்கள் தக்காளி பயிரிடுகின்றனர். எனவே அதற்காக நிலத்தை தயார்செய்த பிறகு 5 டிராலி சாணஎருவை ரோடோவாடர் பயன்படுத்தி நிலத்தில் கலந்து விடுகின்றனர். அது சிறந்த மகசூலை கொடுப்பதுடன் நிலத்தை பயிர்களுக்கு ஏற்றவாறு மாற்றுகிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.