பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 21 July, 2020 3:19 PM IST

ரசாயண உரம், மரபணுமாற்றம் செய்யப்பட்ட விதைகள் என வளர்ந்து கெட்டுவிட்ட இந்த உலகில், இயற்கை முறையில் மண்புழு உரம் தயாரித்து இயற்கையோடு இணைந்த வளவான வாழ்க்கை வாழ கற்றுக்கொடுகிறார் இந்த இயற்கை விரும்பி மனோன்மணி. எளிய முறையில் மண்புழு உரம் மற்றும் உளுந்து தானிய விதைகள் தயாரித்து அசத்தி வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா வடகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் 'மனோன்மணி' (manonmani) இயற்கை விவசாயியான இவர், கிருஷி ஜாக்ரன் தமிழ்நாடு இணையதள ஃபேஸ்புக் (Facebook) பக்கத்தின் மூலமாக நடைபெற்ற ''Farmer the Brand'' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யவும். 

மண்புழு உரம் (Vermicompost)

திடக்கழிவு மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த மண்புழு உரம் (vermicompost). இயற்கையில் கிடைக்கும் விவசாயக் கழிவுப் பொருள்களான சாணம், இலை, தழை போன்றவற்றை உள்கொண்டு எச்சங்களை சிறுசிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்று வதையே மண்புழு உரம் என்கிறோம். இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகிய அத்தனையும் இருக்கிறது. இந்த மண்புழு உரம் 45 முதல் 60 நாளில் உற்பத்தியாகிவிடும் என்கிறார் மனோன்மணி.

இந்தியாவில் உள்ள பலவகையான மண்புழுக்களில் ''சிவப்பு ஊர்ந்தி'' (Red wigglers (Eisenia fetida or Eisenia andrei) எனப்படும் மண்புழு இனங்களே உரம் தயாரிக்கப் பயன்படுத்துவதாகவும், ஒரு வெட்டு பெட் தயாரிக்க 1200 கிலோ ஆடு மற்றும் மாட்டு சானம் ஆகியவற்றை மேலாண்மை முறையில் மக்க வைக்க வேண்டும். பின் 2 கிலோ மண் புழுவை போட வேண்டும்.

மண்புழு உரம் தயாரிக்கும் முறை

  • மண்புழு உரம் தயாரிக்க, இடவசதிக்கு ஏற்ப தொட்டி போன்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

  • முதலில் தொட்டியின் அடியில் கூழாங்கற்களை பரப்பி அதற்கு மேல் மணலை பரப்பி பின்னர் பண்ணைக் கழிவுகளை நிரப்ப வேண்டும்.

  • அந்த குழியில் தென்னைநார் கழிவை கொட்டி, அதன் மீது "கரும்புக்கூழ் கழிவு' கழிவைத் தூவ வேண்டும்.

  • அடுத்ததாக, நன்கு காய்ந்த எரு பொடியை பரப்பி அதன் மீது ஈரமான சாணத்தை கொட்டி அதில் மண் புழுக்களை விடவேண்டும்.

  • சாணத்தை உணவாக எடுத்துக் கொண்ட மண்புழுக்கள் வெளியேற்றும் கழிவுகள் உரமாக கிடைக்கும்.

  • பண்ணையில் சேரும் கழிவுகளை, அடுத்ததடுத்த தொட்டிகளில் நிரப்பி சேகரித்து பயிர்களுக்கு இடலாம்.

மண்புழு உரத்தின் நன்மைகள் (Benefits of earthworm fertilizer)

இன்றைய காலத்தில், அதிக விளைச்சல் வேண்டி பெரும்பாலானோர் மரபணு மாற்றப்பட்ட விதைகள் மற்றும் ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், வேகமாக வளரும் பயிர்கள் விஷத் தன்மையுடன் வளர்கிறது. இதை சாப்பிடும் மனிதர்கள் விலங்குகள் பலதரப்பட்ட நோய்களுக்கு ஆளாகி இறப்பும் நேர்கிறது.

இயற்கையோடு இணைந்த இந்த மண்புழு உரம், பயிர்களுக்கு தேவையான நுண் சத்துகளை வழங்கி ஆரோக்கியமுடன் வளரச் செய்கிறது. இந்த பயிர்கள் ஆர்கானிக் பயிர்கள் என அழைக்கப்பட்டு, சற்று அதிக விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உரம் விற்பனை மற்றும் செய்முறை பயிற்சி (Fertilizer sales and recipe training)

விவசாயிகளும் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை முறைக்கு திரும்பி வருவதாக கூறும் மனோன்மணி, ஒரு கிலோ மண் புழு உரம் 7 ரூபாய்க்கும் ஒரு டன் மண்புழு உரம் 7000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார். 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் தொழு உரத்தை விட, இந்த மண்புழு உரம் மண்ணில் சேர்க்கப்படும் போது மண்ணின் வளம் அதிகரிக்கிறது, இதனால் உர அளவின் பயன்பாடு குறைகிறது, இது விவசாயிக்கு குறைந்த செலவுக்கு வழிவகுக்கிறது என்றார். 

உள்ளூர் விவசாயிகள் முதல் வெளி மாவட்ட, மாநில விவசாயிகள் என பலதரப்பட்டோரும் தன்னிடமிருந்து உரம் வாங்கிச் செல்வதாகவும், தன் 20 வருட அனுபவத்தைக் கொண்டு உள்ளூர் விவசாயிகளுக்கு எளிய முறையில் சிறு அளவிலான உரத் தயாரிப்பு செய்முறை பயிற்சி அளித்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

உளுந்து விதை உற்பத்தி (Black Gram production)

வம்பன் 6 மற்றும் வம்பன் 8 ரக உளுந்து விதை உற்பத்தி மற்றும், தானிய விதைகளையும் உற்பத்தி செய்து வருகிறார். உளுந்து விதை - 100 ரூபாய்க்கும், தானிய விதைகள் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருவதாகவும் மனோன்மணி தெரிவித்தார்.
சிறுவிவசாயிகள், ஏழை எளிய மகளிர்கள் இந்த உர உற்பத்தி தொழில் செய்து பயனடையலாம் என்றும், நிலம், இடம் இல்லாதவர்களும் தங்கள் வீட்டு மாடிகளில் உரத் தோட்டம் அமைத்து உரம் தயாரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மனோன்மணியின் விவசாய சேவையை பாராட்டி அவருக்கு சிறந்த மாவட்ட இயற்கை விவசாயி விருது வழங்கப்பட்டுள்ளது, இதேபோல், அப்துல் கலாம் விருது, உழவன் விருது, உளுந்து உற்பத்தியில் அதிக மகசூல் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது. 

related link... 

தித்திக்கும் தேன் உற்பத்தி & விற்பனையில் கலக்கும் ஈரோடு தம்பதி!

சிறுதானியங்களை சீவல்-ஆக மாற்றி விற்பனையில் அசத்தும் ஈரோடு ராஜமணிக்கம்!

 

English Summary: Valuable added fertilizers from earthworm fertilizer! - Pudukottai woman Manonmani making the Golden soil
Published on: 12 July 2020, 02:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now