VS அறக்கட்டளையின் சார்பில் சமீபத்தில் இந்தியாவின் பல பகுதிகளைச் சேர்ந்த 150 விவசாயிகளின் 5 கோடி ரூபாய் அளவிலான விவசாயக் கடனைச் செலுத்தியதன் மூலம் விவசாயிகளை கடன் சுமையிலிருந்து மீட்டெடுத்துள்ளது.
விவசாயம் எப்போதுமே இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. இருப்பினும் விவசாயிகள் எதிர்ப்பாரா காலநிலை மாற்றம், இயற்கை பேரிடர், போதிய விளைச்சல் இன்மை போன்ற பல காரணங்களால் பாதிக்கப்படுவதுடன் அவர்களின் கடன்சுமையும் பன்மடங்கு அதிகரித்து வருகிறது.
இந்தக் கடன்கள் பெரும்பாலும் விதைகள், உரங்கள், இயந்திரங்கள் வாங்குவதற்கு அல்லது தனிப்பட்ட செலவினங்களுக்காகவும் விவசாயிகள் சார்பில் எடுக்கப்படுகின்றன. ஆனாலும் பல்வேறு இடர்பாடுகளால் குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் கடன் சுமையில் சிக்கிக் கொள்கின்றனர். இந்தியாவில் குறிப்பாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் கடன் சுமையால் கடந்த சில வருடங்களாக விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தான் தொழிலதிபரான விகாஷ் சொரௌத் தனது VS அறக்கட்டளை மூலம் இந்தியாவில் விவசாயிகள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றான விவசாயக் கடன்களைச் சமாளிக்கும் பணியைத் தொடங்கியுள்ளார். இதற்காக முதற்கட்டமாக வறுமையில் வாடுவதுடன் அதிக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் 150 விவசாயிகளின் 5 கோடி ரூபாய் அளவிலான விவசாயக் கடனை செலுத்தியுள்ளார்.
இதனால் விவசாயிகள் கடன் சுமையிலிருந்து மீண்டதுடன், தற்போது உத்வேகத்துடன் மீண்டும் வேளாண் பணிகளை மேற்கொள்ள ஊக்குவித்துள்ளது.
150 விவசாயிகளுக்கு விவசாயக் கடனை அடைப்பது போன்ற நலத்திட்டங்களுக்கு நடுவே, VS அறக்கட்டளை கிராமப்புற சமூகங்களை மேம்படுத்துவதையும், அங்கு நிலையான வளர்ச்சியை கொண்டு வருவதையும் நோக்கமாகக் கொண்ட பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு திறன் பயிற்சித் திட்டங்களை வழங்குவது அவற்றில் ஒன்று. விகாஷ் சொரௌத் மற்றும் அவரது குழுவினர் உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் கைவினைப் பொருட்கள் போன்ற பல்வேறு துறைகளில் இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்புகளை வழங்குகின்றனர்.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, விகாஷ் சொரௌத்தின் அறக்கட்டளை மரங்களை வளர்க்கும் முயற்சிகளை தீவிரமாக ஊக்குவிக்கிறது. விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் ஊக்கத்தொகைகள் மூலம் உள்ளூர் விவசாயிகளை அவர்களது நிலங்களில் மரங்களை நடுவதற்கு ஊக்குவிப்பதன் மூலம், இந்த விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டும்போது காடழிப்பை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஒரு விவசாயியின் மகனாக இருந்து வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வருபவர் விகாஷ் சொரௌத்.விவசாயிகள் கடன் சுமை குறித்து விகாஷ் தெரிவிக்கையில்,”நான் இந்தியாவில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். விவசாயிகள் அன்றாடம் சந்திக்கும் போராட்டங்களை நேரில் கண்டுள்ளேன். அதனால் தான் அவர்களின் இன்னல்களை தீர்க்க தன்னால் முயன்றதை செய்கிறேன்” என தெரிவித்துள்ளார். விவசாயிகளின் கடன் சுமையினை குறைக்கும் விகாஷின் முன்னெடுப்புக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இதையும் காண்க:
மஞ்சள் வீரன் TTF வாசனுக்கு வந்த சோதனை- அடுத்த 10 வருஷம் நோ பைக்
2000 ரூபாய் நோட்டு- இன்றுடன் முடிவுக்கு வரும் காலக்கெடு.. கவனம்!