Central

Monday, 01 July 2024 12:18 PM , by: Muthukrishnan Murugan

eKYC registration-PM Kisan scheme

விவசாயிகளின் நலத்திட்டங்களில் ஒன்றான PM kisan திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.2000 என இதுவரை 17 தவணைகளாக வரவு வைக்கப்பட்டுள்ளது. PM kisan திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் eKYC மேற்கொள்வது அவசியம். இந்நிலையில், இதற்காக நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டமான பிஎம் கிசான் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்ய தேவையான வேளாண் இடுபொருட்களை கொள்முதல் செய்வதற்கு நிதியுதவி அளித்திடும் வகையில் ஒன்றிய அரசு ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.2000/-வீதம் மூன்று தவணைகளாக ஆண்டுக்கு மொத்தம் ரூ.6000/-யினை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்கி வருகிறது. தற்போது மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-

eKYC / ஆதார் இணைப்பு:

PM kisan திட்டத்தில் ஆதார் எண் அடிப்படையிலான நிதி விடுவிப்பு நடைபெறுவதால் இதுவரை வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக இணைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்தில் பயனாளிகள் தொடர்ந்து பயனடைய இ -கே.ஒய்.சி (eKYC) மற்றும் நில ஆவணங்கள் பதிவேற்றம் போன்ற பணிகளை முடித்திருக்க வேண்டும். மேற்கூறிய பணிகள் அனைத்தும் முடித்தால் மட்டுமே தொடர்ந்து உதவித் தொகை பெற இயலும். எனவே, விடுப்பட்ட விவசாயிகள் www.pmkisan.gov.in இணையதளத்தில் ஓடிபி (OTP) உள்ளீடு செய்து தங்கள் பெயரை இணைத்துக் கொள்ளலாம் அல்லது இ-சேவை மையங்கள் இ-அஞ்சலகங்கள் மற்றும் பி.எம்.கிசான் செயலி மூலமாகவும் இணைக்கலாம்.

இது தொடர்பாக கீழ்கண்ட தேதிதிகளில் 3 வட்டாரங்களில் சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றின் விவரம்:

கூடலூர் வட்டாரம்:

  • 01.07.2024 - புத்தூர் வயல் - அரசு உயர் நிலைப்பள்ளி
  • 02.07.2024- முதுகுழி- பஞ்சாயத்து அலுவலகம்
  • 02.07.2024- எருமாடு- கிராம நிர்வாக அலுவலகம்
  • 03.07.2024- உப்பட்டி- முதன்மை பதப்படுத்தும் மையம்
  • 09.07.2024- மூனனாடு- கிராம நிர்வாக அலுவலகம்
  • 10.07.2024- செருமுள்ளி- கூட்டுறவு வங்கி
  • 10.07.2024- கொளப்பள்ளி- கிராம நிர்வாக அலுவலகம்
  • 11.07.2024- தேவாலா- கிராம நிர்வாக அலுவலகம்
  • 16.07.2024- ஸ்ரீமதுரை - கிராம நிர்வாக அலுவலகம்
  • 17.07.2024- அத்திபாளி- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
  • 18.07.2024- நெல்லியாம்பதி- அங்கன்வாடி மையம்
  • 20.07.2024- புளியம்பாறை- அரசு நடுநிலைப்பள்ளி
  • 24.07.2024- குனில்- பஞ்சாயத்து அலுவலகம்
  • 25.07.2024- நெல்லியாளம்- கிராம நிர்வாக அலுவலகம்
  • 26.07.2024- பந்தலூர்- கிராம நிர்வாக அலுவலகம்
  • 27.07.2024- சன்னக்கொல்லி- அங்கன்வாடி மையம்

உதகமண்டலம் வட்டாரம்:

  • 01.07.2024 - கக்குச்சி- கிராம நிர்வாக அலுவலகம்

குன்னூர் வட்டாரம்:

  • 01.07.2024 - ஜெகதளா - காரகொரை சமுதாய கூடம்
  • 02.07.2024- குன்னூர்- தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம், சிம்ஸ் பார்க்

பி.எம் கிசான் திட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் 16,236 பயனாளிகள் தற்பொழுது பயன்பெற்று வருகின்றனர். எனவே, இ-கே.ஒய்.சி (eKYC) விடுப்பட்டுள்ள விவசாய பயனாளிகள் அனைவரும் இம்முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

Read more:

இராசாயன உரத்தினால் மெல்ல உயரும் வெப்பம்- கட்டுப்படுத்த விவசாயிகள் என்ன செய்யலாம்?

நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)