அனைத்து தெய்வங்களும் வாசம் செய்யும் உன்னத உயிரினம் எது தெரியுமா? அதுதான் பசுமாடு. அதனால்தான் நாம் புதுவீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்யும்போது, கன்றுடன் பசுமாட்டையும் அழைத்துவந்து பூஜை செய்கிறோம். ஆகத் தமிழகத்தைப் பொருத்தவரை, பசுமாடும் தெய்வத்திற்கு ஒப்பாகவேக் கருதப்படுகிறது. பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது இந்த நடைமுறை.
கொட்டகை இலவசம்
அதேநேரத்தில் விவசாயத்திலும் கால்நடைகளின் பங்கு இன்றியமையாதது. அந்தக் கால்நடைகளை வளர்ப்பதில் விவசாயிகளுக்கு உள்ள சிரமத்தையும், நிதிச்சுமையையும் போக்குவதற்கு, மத்திய-மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச்செயல்படுத்தி வருகின்றன. அப்படியொரு திட்டம் தான் இலவச மாட்டுக்கொட்டகைத் திட்டம். அதாவது 100% மானியம். நீங்கள் எந்தவித முதலீடும் செய்யத் தேவையில்லை. உழைத்தால் மட்டுமேப் போதுமானது.
இத்திட்டம் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 2, 3,5,9 மாடுகள் என பல்வேறு பிரிவுகள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற ஊரக வேலைவாய்ப்பு ஊறுதித் திட்ட அட்டை வைத்திருக்க வேண்டியது அவசியம்.
இதன் படி பயன்பெற சுயஉதவிக் குழுக்களையோ, பஞ்சாயத்து கிளார்க், கால்நடை மருத்துவரையோ அல்லது நேரடியாகத் திட்டங்கள் தொடர்பான வட்டார வளர்ச்சி அலுவலரையோ (Scheme BDO)ஆவின் பால் சங்கத்தையோ விவசாயிகள் அல்லது மாடு வளர்க்க விரும்புவோர் அணுக வேண்டும்.
கொட்டகை வகைகள் (Shed varieties)
இரண்டு மாடுக் கொட்டகை 98 ஆயிரம் ரூபாய் செலவிலும், 3 மாடுகளைக் கொண்ட கொட்டகை 1,20,000ரூபாய் செலிவிலும் அமைத்துத்ததரப்படுகிறது.
இதுபோல் கொட்டகை அமைக்க அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
தகுதி (Qualification)
ஏற்கனவே மாடு வளர்த்துவருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
இதைத்தவிர மாடு வளர்க்க ஆசைப்படும் அனைவருமே விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)
சொந்தமாக நிலம் வேண்டும்
சாப்கார்டு ஏற்கனவே போட்டதாக இருக்க வேண்டும்.
ஆதார் அட்டை
வாக்காளர் அடையாள அட்டை
கம்ப்யூட்டர் சிட்டா
யாரை அணுகுவது?
பஞ்சாயத்துக் கிளார்க்
கால்நடை மருத்துவர்
சுய உதவிக் குழுக்கள்
வட்டார வளர்ச்சி அலுவலர்
இவர்களில் யாரேனும் ஒருவரிடம் இருக்கும் விண்ணப்பத்தைப் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.
மேலும் படிக்க...
முழு முட்டை Vs வெள்ளைக்கரு – எது ஆரோக்கியமானது?
நீரிழிவு நோயை தடுக்கும் பழைய சோறு - யாரும் அறிந்திராத உண்மை!