தாராபுரம் அருகே கோழிப்பண்ணையில் இடி தாக்கிய சம்பவத்தில், தாக்கி 5 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி பலியாகின. இயற்கையின் இந்தக் கோரத்தாண்டவம், கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளையும், கால்நடை ஆர்வலர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பி.குமாரபாளையம், சம்பளதோட்டம் பகுதியில் ராமசாமி என்பவர் 3 கோழிப்பண்ணைகளை அமைத்து பராமரித்து வருகிறார். இதில், சுமார் 10 ஆயிரம் கறிக்கோழிகளை ஒப்பந்த அடிப்படையில் வளர்க்கப்பட்டு வந்தன.
இந்நிலைநில் 2 நாட்களுக்கு முன்பு, இரவு வேளையில், தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அப்போது ராமசாமியின் கோழிப்பண்ணை அருகில் இருந்த தென்னை மரத்தின் மீது இடி விழுந்து, கறிக்கோழி பண்ணை முழுவதும் தீக்கு இரையானது.
கொழுந்துவிட்டு எரிந்த தீயினால் பண்ணையில் இருந்த 5 ஆயிரம் கோழிகளும் கருகி உயிரிழந்தன. இடி தாக்கி 5 ஆயிரம் கோழிகள் பலியான சம்பவம், கால்நடை விவசாயிகளையும், கால்நடை ஆர்வலர்களையும், பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
மேலும் படிக்க...
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 - அமைச்சர் தகவல்
தேர்த்திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து விபத்து - 11 பேர் உடல் கருகி பலி!